
புகழ்பெற்ற `Stranger Things' சீரிஸின் 5வது சீஸனின் முதல் பாகம் வெளியாகிறது. ஹாப்கின்ஸ் நகரத்தில் இம்முறை என்ன நடக்கிறது என்பதே கதை. கடைசி சீனனான இதன் முதல் நான்கு எப்பிசோடுகள் இப்போது வெளியாகிறது.
தினகரன் இயக்கத்தில் ராஜேஷ்குமார் எழுத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `ரேகை'. நகரத்தில் கிடைக்கும் வெட்டப்பட்ட கை ரேகைகள் நான்கு இறந்த நபர்களுடன் ஒத்துப் போகிறது. இதில் இருக்கும் மர்மம் என்ன என்பதே கதை.
Michael Fimognari இயக்கியுள்ள படம் `Jingle Bell Heist'. சோஃபியா - நிக் என்ற இருவர் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டாரை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
தீபக் இயக்கத்தில் இந்திரன்ஸ் நடித்துள்ள படம் `Private'. ஒரு பதின்வயது பெண்ணும், முதியவரும் மேற்கொள்ளும் பயணத்தில் நடப்பவையே கதை.
ஷஷாங்க் இயக்கத்தில் வருண் தவான், ஜான்வி கபூர் நடித்த படம் `Sunny Sanskari Ki Tulsi Kumari'. திருமணம் செய்யப் போகும் ஜோடியின் முன்னாள் காதலனும், முன்னாள் காதலியும் கல்யாணத்திற்கு வர, அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் இயக்கிய படம் `ஆர்யன்'. எழுத்தாளர் ஒருவர் ஒரு பர்ஃபெக்ட் க்ரைம் செய்யப்போவதாக அறிவிக்கிறார். அதனை தடுக்க முயலும் போலீசின் முயற்சிகளே கதை.
ரவிதேஜா நடித்துள்ள படம் `Mass Jathara'. போலீஸ் ஒருவருக்கு வரும் சவாலே கதை.
சாய் மோகன் இயக்கிய படம் `Sasivadane'. சசி - ராகவா இடையியேயான காதல் பற்றிய கதை.
பிரனீஷ் விஜயன் இயக்கத்தில் ஷராஃபுதீன், அனுபமா நடித்த படம் `The Pet Detective'. காதலியை கவர, அவளின் தொலைந்து போன நாயை தேடி செல்லும் இளைஞன் ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அதன் பின் என்ன என்பதே கதை.
ரமேஷ் இயக்கியுள்ள படம் `ரஜினி கேங்க்'. ரஜினி - மைனா இருவரும் தங்களது திருமணத்திற்காக ஒரு தாலியை திருடுகிறார்கள். அதன் பின் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களே கதை.
மகேஷ்பாபு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, பாக்ய ஸ்ரீ, உபேந்திரா நடித்துள்ள படம் `Andhra King Taluka'. தன் ஆதர்சன நாயகனுக்காக ஒரு ரசிகன் செய்யும் விஷயங்களே கதை.
சந்த்ரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் `ரிவால்வர் ரீட்டா'. அமைதியாக வாழும் ரீட்டாவின் குடும்பம் ஒரு கேங்க்ஸ்டரின் வருகையால் கலவரமாகிறது. இதனை ரீட்டா எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.
கருணாநிதி இயக்கத்தில் வாசன் நடித்துள்ள படம் `IPL'. குணசேகரன் என்ற வாகன ஓட்டுனரின் பிரச்சனைக்கு அன்பு என்ற இளைஞன் செய்யும் உதவிகளே கதை.
சரண்ராஜ் இயக்கியுள்ள படம் `வெள்ளகுதிர'. கதிரின் பேராசையால் அவரது குடும்பம் சந்திக்கும் பாதிப்புகளும், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுமே கதை.
சுகவனம் இயக்கியுள்ள படம் `ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. தன் மகனை காப்பாற்றிய குலா தெய்வத்திற்கு கிடாயை பலியிடுவதாக வேண்டும் தந்தையால், வேண்டுதலை நிறைவேற்ற முடிந்ததா என்பதே கதை.
ஹரி வெங்கடேஷ் இயக்கியுள்ள படம் `Friday'. தன் தம்பிக்காக பழிவாங்க நினைக்கும் ஒரு அண்ணனின் கதை.
நஸ்ருதீன் ஷா, விஜய் வர்மா, ஃபாத்திமா சனா சைக் நடித்துள்ள படம் `Gustaakh Ishq'. எழுத்தாளரிடம் பாடம் கற்க போகும் இளைஞன், அவரது மகளுடன் காதல் கொள்ள,, அதன் பின் நடப்பவையே கதை.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரித்தி சனோன் நடித்துள்ள படம் `Tere Ishk Mein'. சங்கர் - முக்தியின் அழுத்தமான காதல் பற்றிய படம்.
Byron Howard இயக்கிய Zootopia படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கியுள்ளார். இம்முறை ஸூட்டோபியா நகரத்தில் பாம்பு ஒன்று புகுந்துவிட, அதை பிடிக்க நடக்கும் களேபரங்களே கதை.
David Freyne இயக்கத்தில் Miles Teller, Elizabeth Olsen நடித்துள்ள படம் `Eternity'. மரணத்திற்கு பிறகான அமரத்துவ வாழ்வை யாருடன் கழிப்பது என்ற தேர்வை ஒரு பெண் செய்வதில் வரும் சிக்கல்களே படம்.