"அடுத்த படம் சிவா உடன் தான்!" - SK - VP COMBO உறுதி செய்த வெங்கட்பிரபு | Sivakarthikeyan
சிவகார்த்திகேயனின் மதராஸி சமீபத்தில் வெளியானது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் `பராசக்தி' படத்தில் பிசியாக இருக்கிறார் சிவா. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து சிவா யார் படத்தில் நடிக்க உள்ளார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெங்கட்பிரபு SKவை வைத்து இயக்கும் படம் பற்றி பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.
அந்த வீடியோவில் "அடுத்த படத்தை கூடிய விரைவில் துவங்கவுள்ளேன். எல்லோருக்கும் தெரியும் சிவகார்த்திகேயனுடன்தான் என் அடுத்த படம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. Pre Production பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பு சென்று விடுவோம். இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த The GOAT படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் SK. மேலும் இந்தப் படத்தை இயக்கும் முன்பே ஏ ஜி எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தார் வெங்கட்பிரபு. அதுவே சிவாவின் 25வது படமாக உருவாக வேண்டியது. ஆனால் விஜய் படம் இயக்கும் வாய்ப்பு அமைய SK படம் தள்ளிப்போனது. இப்போது SK 25, `பராசக்தி' ஆகிவிட்டது. மேலும் SK பட இயக்குநர் பட்டியலில் டான் பட சிபி சக்கரவர்த்தி பெயரும் அடிபட்டு வந்தது. எனவே இப்போது உள்ள சூழல் படி ஒரே நேரத்தில் சிவா வெங்கட்பிரபு படத்திலும் சிபி படத்திலும் நடிப்பார் என்பது போல சொல்லப்படுகிறது.