சூர்யா 46 Pan Indian படமா? தயாரிப்பாளர் சொன்ன தகவல் | Naga Vamsi | Suriya 46 | Venky Atluri
சூர்யா நடிக்கும் 'சூர்யா 46' படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்தார். இது உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப படம் என்றும் தெரிவித்திருக்கிறார். சூர்யா, மமிதா பைஜூ, பவானி ஸ்ரீ, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவீனா டாண்டன் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் `கங்குவா' இப்படத்திற்கு பின் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும்`கருப்பு' மற்றும் வெங்கி அட்லுரி இயக்கிவரும் `சூர்யா 46' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. கருப்பு படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என ஆர் ஜே பாலாஜி சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அடுத்தாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிவரும் `சூர்யா 46' படத்தின் அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அளித்துள்ளார். அவர் தயாரிப்பில் வெளியாகவுள்ள `மாஸ் ஜாதரா' படத்தின் புரமோஷன் பேட்டியின் போது `சூர்யா 46' குறித்து பேசிய அவர் "சூர்யா சாரின் படம் 50 சதவீதம் முடிந்துவிட்டது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் படமாகவும், ஒரு முழுமையான குடும்ப படமாக உருவாகிறது.
கஜினியில் வந்த சஞ்சய் ராமசாமி பாத்திரத்தின் சாயல் இதில் இருக்கும். இது Pan Indian படம் கிடையாது. ஆனால் ரிஷப் ஷெட்டி நடிப்பில் ஒரு படம் தயாரிக்கிறோம். அது Pan India படமாக உருவாகிறது" எனக் கூறியுள்ளார்.
இப்படத்தில் சூர்யாவைத் தவிர மமிதா பைஜூ, பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவீனா டாண்டன் `ஆளவந்தான்' படத்திற்குப் பின் 24 ஆண்டுகளுக்குப் கழித்து நடிக்கும் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

