வி ஜே சித்து இயக்கும் `டயங்கரம்' பூஜையுடன் துவக்கம்! | V J Siddhu | Dayangaram
யூ-டியூப் மூலம் பிரபலமானவர் வி ஜே சித்து. இவர் சினிமாவில் இயக்குநர் + ஹீரோவாக `டயங்கரம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு சில மாதங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. இன்று இப்படம் பூஜையுடன் துவங்கியுள்ளது.
இந்தப் படத்தில் வி ஜே சித்து உடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை சிந்துவின் வாழ்வில் நடந்த சம்பவத்தை மையப்படுத்திய ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகிறதாம். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தை தயாரிப்பதோடு படத்தின் இசையையும் தனது வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் வெளியிடுறார் ஐசரி கணேஷ்.
இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

