A R Rahman
A R RahmanTere Ishk Mein

10 கோடி வீயூஸ்.. ட்ரெண்டிங்கில் ஏ ஆர் ரஹ்மான்! மேடையில் மேஜிக் செய்த தனுஷ் | Tere Ishk Mein | ARR

இந்த நிலையில் `Tere Ishk Mein' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று நடந்துள்ளது. அதில் ஒட்டு மொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஏ ஆர் ரஹ்மான் - தனுஷ் கூட்டணியில் ஒரு பாடல் பாடும் நிகழ்வும் நடந்துள்ளது.
Published on

தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் `Tere Ishk Mein'. இப்படத்தில் க்ரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு தனுஷ் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவான `Raanjhanaa' மற்றும் `Atrangi Re' ஆகிய படங்கள் உருவானது. மூன்றாவது முறையாக உருவாகும் `Tere Ishk Mein' பட கதை `Raanjhanaa' படத்தின் யுனிவர்சில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு ஸ்பெஷல் மூன்று படங்களுக்குமே இசை ஏ ஆர் ரஹ்மான். `Raanjhanaa' மற்றும் `Atrangi Re' படங்களில் பாடல்கள் இந்தி மட்டுமல்லாது தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் `Tere Ishk Mein' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று நடந்துள்ளது. அதில் ஒட்டு மொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஏ ஆர் ரஹ்மான் - தனுஷ் கூட்டணியில் ஒரு பாடல் பாடும் நிகழ்வும் நடந்துள்ளது. இதில் படத்திலிருந்து ஒரு பாடலின் தமிழ் பதிப்பை தனுஷ் பாடியுள்ளார். நல்ல காலம் வந்துருச்சு என்ற அந்தப் பாடலை தனுஷே எழுதியும் உள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் நன்றியை பதிவு செய்துள்ளார் தனுஷ். இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

A R Rahman
துல்கரின் `காந்தா' முதல் Edgar Wrightன் `The Running Man' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ!

மேலும் இப்படத்திலிருந்து முன்பு வெளியான ஒரு பாடல் பெரிய சாதனையை செய்துள்ளது. அக்டோபர் 18ம் தேதி வெளியான படத்தின் டைட்டில் டிராக்கான `Tere Ishk Mein' வீடியோ பாடலாக வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியிருக்கிறது அதற்குள் 100 மில்லியன், அதாவது 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அர்ஜித் சிங் பாடியுள்ள இப்பாடலின் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் 9 பாடல்கள் அடங்கிய முழு தொகுப்பு வெளியாகியுள்ளது. படம் நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இதேபோல் ரஹ்மான் இசையமைத்துள்ள இன்னொரு பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது. ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கிவரும் `பெத்தி' தெலுங்கு படத்திற்கு இசையை ஏ ஆர் ரஹ்மான். இப்படத்திலிருந்து `சிக்கிரி சிக்கிரி' பாடல் நவம்பர் 7ம் தேதி வெளியானது. மோஹித் சௌஹான் இப்பாடலை பாடி இருந்தார். பாடல் பெரிய வரவேற்பை பெற்று ஹிட்டாகி இருக்கிறது. ஒரேவாரத்தில் நான்கு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இதில் ராம்சரண் ஆடியுள்ள ஸ்டெப் பலரையும் ஈர்த்துள்ளது. இப்போது அந்த ஸ்டெபை பலரும் ஆடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். தொடர்சியாக தனது இசையால் டிரெண்டிங்கில் இருக்கும் ரஹ்மான் அடுத்ததாக தமிழில் `Genie', `Moon Walk', `Killer' இந்தியில் `Ramayana', `Lahore 1947' போன்ற படங்கள், ஹன்சல் மெஹ்தா இயக்கியுள்ள `காந்தி' வெப் சீரிஸ் போன்றவற்றில் பணியாற்றி வருகிறார்.

A R Rahman
"உங்கட்ட ஒர்க் பண்ண ரெடினு சொன்னான், நா ரெடியில்லனு தொறத்தீட்டேன்!" - சந்தோஷ் நாராயணன் கலகல

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com