Kaantha
KaanthaThis Weeks Release

துல்கரின் `காந்தா' முதல் Edgar Wrightன் `The Running Man' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ!

இந்த வாரம் ஓடிடியில் ஷெஃபாலியின் Delhi Crime S3 உள்ளிட்ட சீரிஸ் மற்றும் தியேட்டர்களில் துல்கரின் `காந்தா' முதல் Edgar Wrightன் `The Running Man' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

1. Series: Delhi Crime S3 (Hindi) Netflix - Nov 13

Delhi Crime
Delhi Crime

ஷெஃபாலி ஷா, ஹூமா குரேஷி நடித்துள்ள சீரிஸ் `Delhi Crime S3'. DCP வர்த்திகா குழுவிடம் கைவிடப்பட்ட ஒரு குழந்தை கிடைக்கிறது. அது யார் குழந்தை என துவங்கும் விசாரணை எங்கு சென்று முடிகிறது என்பதே கதை.

2. Inspection Bungalow (Malayalam) Zee5 - Nov 14

Inspection Bungalow
Inspection Bungalow

சைஜூ இயக்கியுள்ள சீரிஸ் `Inspection Bungalow'. விஷ்ணு என்ற காவலதிகாரி அமானுஷ்ய பங்களாவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு நடக்கும் நிகழ்வுகளே கதை.

3. OTT: A Merry Little Ex-Mas (English) Netflix - Nov 14

A Merry Little ExMas
A Merry Little ExMas

Steve Carr இயக்கியுள்ள படம் `A Merry Little Ex-Mas'. விவாகரத்துக்கு முன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட நினைக்கும் தம்பதிக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.

4. In Your Dreams (English) Netflix - Nov 14

In Your Dreams
In Your Dreams

Alex Woo இயக்கியுள்ள படம் `In Your Dreams'. ஸ்டீவி - எலியாட் என்ற அக்கா தம்பி, தங்கள் பெற்றோர் பிரிந்து செல்லாமல் இருக்க கனவுலகத்துக்கு செல்லும் அட்வென்சர் பயணமே கதை.

5. Post Theatrical Digital Streaming: Dude (Tamil) Netflix - Nov 14

Dude
Dude

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் `ட்யூட்'. ஹீரோயினுக்காக ஹீரோ செய்யும் விஷயங்களே கதை.

6. Bison (Tamil) Netflix - Nov 14

Bison
Bison

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த படம் `பைசன்'. ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை பற்றிய கதை.

7. Telusu Kada (Telugu) Netflix - Nov 14

Telusu Kada
Telusu Kada

நீரஜா கோனா இயக்கத்தில் சித்து நடித்த படம் `Telusu Kada'. இரண்டு பெண்களை காதலிக்கும் இளைஞனின் கதை.

8. Avihitham (Malayalam) Jio Hotstar - Nov 14

Avihitham
Avihitham

சென்னா ஹெக்டே இயக்கிய படம் `Avihitham'. ஆணாதிக்க கிராமம் ஒன்றில், பிறரின் உறவுகள் பற்றி புறணி பேசும் இளைஞர்கள் பற்றியும் அதைப் பற்றிய சமூக பார்வையையும் பகடியாக சொல்லும் கதை.

9. K Ramp (Telugu) Aha - Nov 15

K Ramp
K Ramp

ஜெய்ன்ஸ் நானி இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்த படம் `K-Ramp'. குமார் என்ற இளைஞனின் காதல் வாழ்க்கையில் வரும் சிக்கல்களே கதை.

10. Theatre: Kaantha (Tamil) - Nov 14

Kaantha
Kaantha

செல்வமணி செல்வா இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ, ராணா நடித்துள்ள படம் `காந்தா'. ஒரு நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குநருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலே கதை.

11. Kumki 2 (Tamil) - Nov 14

Kumki 2
Kumki 2

பிரபு சாலமன் இயக்கத்தில் மதி நடித்துள்ள படம் `கும்கி 2'. ஒரு யானைக்கும் சிறுவனுக்குமான பாசம் வளர்ந்த பின்பு என்ன ஆகிறது என சொல்லும் கதை.

12. Kinaru (Tamil) - Nov 14

Kinaru
Kinaru

ஹரிகுமரன் இயக்கியுள்ள படம் `கிணறு'. நான்கு சிறுவர்கள் ஒரு கிணறு வெட்ட எடுக்கும் முயற்சிகளே கதை.

13. Dawood (Tamil) - Nov 14

Dawood
Dawood

பிரஷாந்த் ராமன் இயக்கியுள்ள படம் `தாவூத்'. ஒரு வாகன ஓட்டுனருக்கு கேங்க்ஸ்டருக்கும் இடையிலான பிரச்சனையே கதை.

14. Madras Mafia Company (Tamil) - Nov 14

Madras Mafia Company
Madras Mafia Company

முகுந்தன் இயக்கத்தில் ஆனந்த்ராஜ், சம்யுக்தா நடித்துள்ள படம் `மெட்ராஸ் மாஃபியா கம்பெனி'. கேங்ஸ்டர் - போலீஸ் மோதலே கதை.

15. Santhana Prapthirasthu (Telugu) - Nov 14

Santhana Prapthirasthu
Santhana Prapthirasthu

சஞ்சீவ் ரெட்டி இயக்கியுள்ள படம் `Santhana Prapthirasthu'. குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி கொடுக்கப்படும் அழுத்தங்களை பற்றி காமெடியாக சொல்லும் படம்.

16. Jigris (Telugu) - Nov 14

Jigris
Jigris

ஹரீஷ் ரெட்டி இயக்கியுள்ள படம் `Jigris'. நான்கு நண்பர்கள் பணம், ஐடி, மொபைல் என எதுவும் இல்லாமல் கோவா செல்கிறார்கள். அதன்பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.

17. De De Pyaar De 2 (Hindi) - Nov 14

De De Pyaar De 2
De De Pyaar De 2

அன்ஷுல் சர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் `De De Pyaar De 2'. வயது வித்தியாசத்தால் ஒரு காதல் ஜோடி சந்திக்கும் பிரச்சனைகளே கதை.

18. Now You See Me: Now You Don't (English) - Nov 14

Now You See Me Now You Don't
Now You See Me Now You Don't

Ruben Fleischer இயக்கியுள்ள படம் `Now You See Me: Now You Don't'. முந்தைய பாகங்களை போல இந்த முறை இக்குழு நடத்தும் கொள்ளை என்ன? எப்படி? என்பதே கதை.

19. The Running Man (English) - Nov 14

The Running Man
The Running Man

Edgar Wright இயக்கத்தில் Glen Powell நடித்துள்ள படம் `The Running Man'. தன் குடும்பத்தின் நலனுக்காக ஆபத்தான போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் ஹீரோவின் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com