Sirai is collected big at box office
Vikram PrabhuSirai

`சிறை' படத்தின் வசூல் இத்தனை கோடியா? | Sirai | Vikram Prabhu

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் செலவில் உருவான `சிறை' படம் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது.
Published on

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்‌ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடித்து கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வெளியான படம் `சிறை'. வசூல்ரீதியிலும், விமர்சனரீதியிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கிடைத்தது.

நிஜ சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதையை `டாணாக்காரன்' என்ற பெயரில் தமிழ் எழுதியிருந்தார். ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பயணத்தில் காவலருக்கு, கைதிக்கு ஏற்படும் புரிதல்களும், நிலுவையில் இருக்கும் வழக்குகளில் விசாரணைக்குக்கூட வராமல் வாய்தாவிலேயே அலைக்கழிக்கப்படும் வழக்குகள் பல உள்ளன என்பதையும் அழுத்தமாகக் கூறியது படம். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் செலவில் உருவான `சிறை' படம் இதுவரை உலகளவில் 31.85 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

Sirai is collected big at box office
"இப்பவும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா?" - நிதானமாக பதில் சொன்ன அஷ்வின் | Ashwin Kumar

இப்படம், தமிழ்நாட்டில் 27.27 கோடி, கேரளாவில் 31 லட்சம், கர்நாடகாவில் 1.05 கோடி, ஓவர் சீஸில் 2.95 கோடியும் வசூல் செய்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், எல்லா இடங்களிலும் ’சிறை’ படம் டப் செய்யப்படாமல் நேரடி தமிழ்ப்படமாகவே வெளியிடப்பட்டுள்ளது.

Sirai is collected big at box office
Vikram PrabhuSirai

தரமான ஒரு படம் மிகப்பெரிய லாபகரமான படமாக அமைந்துள்ளது. `சிறை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் ராஜகுமாரி, வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். திரையரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் நாளை (ஜன 23) ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

Sirai is collected big at box office
`சிறை' போலீஸ் அமைப்பு பற்றிய கேள்விகளை உண்டாக்கும் - வெற்றிமாறன் | Vetrimaaran |

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com