விஜய் சாருக்கு ஆதரவு, அஜித் சாருக்கு வாழ்த்து! - சிம்பு | Simbu | Vijay | Ajith
சிம்பு, விஜயின் 'ஜனநாயகன்' படத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சினிமா துறையில் விஜயின் பங்களிப்பை பாராட்டி, அவருக்காக ஆதரவாக நிற்க வேண்டும் என கூறினார். அரசியல் அனுபவம் இல்லாததால், அதில் கருத்து சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 3ம் தேதி அவரது பிறந்தநாள், அதனை முன்னிட்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார் சிம்பு.
அப்பேட்டியில் விஜயின் ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக கருத்து சொன்னது பற்றி கேட்கப்பட "‘ஜனநாயகன்' விஜய்னு பிரிச்சுப் பார்க்க முடியாது. இத்தனை வருஷம் சினிமாவுல இருந்திருக்கார். கடைசியா ஒரு படம் பண்ணியிருக்கார். அது திரைக்கு வரணும்னு, சினிமாத்துறையில ஒரு ஆதரவா அவருக்காக நிக்கணும்னு சொல்லியிருந்தேன். அதனாலதான் நான் ட்வீட் போட்டிருந்தேன். எனக்கு அரசியலும் தெரியாது, அதில் அனுபவமும் கிடையாது. அரசியல் பத்திப் பேசுறதுக்கு நான் சரியான ஆளும் கிடையாது. அவரோட அரசியல் எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன்." என்றார்.
துபாயில் அஜித்தை சந்தித்து பற்றிய கேள்விக்கு "மலேசியாவுல ஒரு நகைக்கடைத் திறப்பு விழாவுக்காக போயிருந்தேன். போகும் பாதையிலதான் அஜித் சாரோட ரேஸிங்கும் இருந்தது. இவ்வளவு தூரம் வந்துட்டு அவரைப் பார்க்காமலும் போயிடக் கூடாது. அவருக்குத் தொந்தரவு இல்லைன்னு தெரிஞ்சுது. அவர் வரச் சொன்ன பிறகே போய் சந்திச்சேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கும் பேச நேரம் இருந்ததால, என்கிட்ட ரேஸிங் பத்தி டீட்டெயிலிங்கா சொன்னார். அவரைச் சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம்தான்!" என்றார்.

