“ஜிகர்தண்டா XX.. லாரன்ஸால் இப்படியும் முடியுமா!” கார்த்திக் சுப்புராஜை உச்சி முகர்ந்த ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிகர்தண்டா XX திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், லாரன்ஸ்
ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், லாரன்ஸ்pt web

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இத்திரைப்படத்தின் டீசர் போன்ற வீடியோ சில மாதங்கள் முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் திரைப்படமோ பெரும் ஆரவாரம் ஏதும் இன்றி அமைதியாக வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது.

ஜிகர்தண்டா 2
ஜிகர்தண்டா 2ட்விட்டர்

தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம், அனைத்து தரப்பில் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தை ஓரம்கட்டி எங்கும் பேசு பொருளாகி இருக்கிறது. படத்தினை பார்த்த திரைக்கலைஞர்கள் அனைவரும் ஒருசேர பாசிடிவ் விமர்சனங்களையே கொடுக்க படமும் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளது.

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், லாரன்ஸ்
மலைவாழ் மக்களின் சிக்கலும் அரசியலும் கலந்த கலவை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தினை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். 'லாரன்ஸால்' இப்படியும் நடிக்க முடியுமா.? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது, எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. 'திலீப் சுப்ராயனின்' சண்டை காட்சிகள் அபாரம். 'சந்தோஷ் நாராயணன்' வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம்.

jigarthanda doublex
jigarthanda doublexfile image

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் And Team” என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை தங்களின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com