\
Madhavan
MadhavanGDN

ஜி டி நாயுடு பயோபிக் GDN ரிலீஸ் அப்டேட்! | Madhavan | G D Naidu

மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Published on

ஆர். மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி வரும் படம் GDN. 'இந்தியாவின் எடிசன்' என்றும் 'வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்' என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பயோபிக் படம் தயாராகி வருகிறது.

ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவனின் தோற்றத்தை முன்பே போஸ்டராக வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Madhavan
முதல்வர் விஜயின் ஆட்சி, 'முதல்வன்' படம் பார்ப்பதுபோல் உள்ளது - சஞ்சீவ் | CM Vijay | Sanjeev

படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தேசிய விருது வென்ற 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். தற்போது இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

Madhavan
என் உதவியாளர் சொன்ன ஐடியாதான் கருப்பு பாட்டு! - சூர்யா நெகிழ்ச்சி | Suriya | Karuppu Thanks Meet
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com