"Function-க்கு Rolls-Royce, Self Drive-க்கு Bentley..." லெஜண்டின் கார் கலெக்ஷன்! | Legend Saravanan
`லெஜண்ட்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் `லெஜண்ட்' சரவணன். இப்போது இவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் `லீடர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட சரவணனிடம் அவரது கார் கலெக்ஷன் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன `லெஜண்ட்' சரவணன் "பெண்களுக்கு நகை, பட்டு புடவை பிடிக்கும். பசங்களுக்கு கார் தானே. சில கார்களை என் நண்பர்களுக்கு பரிசாகவும் கொடுத்திருக்கிறேன். ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு போவது என்றால் ரோல்ஸ் ராய்ஸ்-ல் செல்வேன். நானே ஓட்டி செல்வது என்றால் பென்ட்லீ எடுத்து செல்வேன். அதில் ஐந்து வகை கார்கள் இருக்கிறது. லாங்க் டிராவல் என்றால் அதைதான் பயன்படுத்துவேன். பின்னால் அமர்ந்து செல்வது என்றால் ரேன்ஜ் ரோவரில் செல்வேன். இப்போது என்னிடம் 30க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. ஆனால் இப்போதெல்லாம் கார் வாங்குவதை நிறுத்திக் கொண்டேன். புதிதாக வரும் கார்கள் எதுவுமே வாங்குவதில்லை. என்னுடைய ட்ரீம் கார்ஸ் எல்லாம் 10 வருடங்களுக்கு முன்பே வாங்கிவிட்டேன். இப்போது அந்தப் பணத்தை எல்லாம் மக்கள் நலனுக்காக கொடுக்கும் தொகைக்கு பயன்படுத்துகிறேன். நலிந்த நிலையில் இருக்கும் ஏழை எளியோருக்கு எப்படி உதவுவது என அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.
அவரை பற்றி வரும் கிண்டல்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் எனக் கேட்கப்பட "அவை என்னை பெரியதாக பாதிப்பதில்லை. அதில் ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால் எடுத்துக் கொள்வேன். மற்றபடி அந்த வகையான விமர்சனங்களை பாத்ரூம் வாசங்களாக தான் நினைக்கிறேன். மதிப்பு மிக்க விஷயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளலாம்." என்றார்.
மேலும் தன்னுடைய மூன்றாவது படம் பற்றி கூறியவர் "என்னுடைய மூன்றாவது படத்தில் ட்ரிப்பிள் ஆக்ஷன் செய்கிறேன். அதுதான் இப்போது எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது. இதுவரை ட்ரிபிப்ள் ஆக்ஷனில் இப்படி ஒரு கதையை யாருமே சொன்னதில்லை என்பது மாதிரியான கதையாக அது இருக்கும்." என்றார் `லெஜண்ட்' சரவணன்.

