Dhanush, Ken Karunas
Dhanush, Ken KarunasYouth

தனுஷ் சார் போன் செய்து சொன்ன விஷயம்! - கென் கருணாஸ் | Dhanush | Ken Karunas | Youth

தனுஷ் சார் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை, ட்ரெய்லர் மட்டும் தான் பார்த்தார். அவர் இருக்கும் பிசியில் என் பட நிகழ்வுக்கு வந்ததே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கடைசி நேரத்தில் தான் வருகிறேன் என்றே சொன்னார்.
Published on

பிரபல நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ். `அசுரன்', `விடுதலை' போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது இயக்குநராகவும் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ள படம் `யூத்'. தமிழில் இப்படம் மார்ச் 19 வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக ஹைதராபாத் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டது படக்குழு.  

இந்த நிகழ்வில் பேசிய கென் கருணாஸ் "இப்போதெல்லாம் ஒருவருக்கு ஆதரவு கிடைப்பது சாதாரண விஷயமில்லை. சென்னையிலிருந்து வந்த எங்களுக்கு ஹைதராபாத்தில் ஆதரவு கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றி. `லிட்டில் ஹார்ட்ஸ்' டீம் பற்றி சொல்லியாக வேண்டும். முதல் படத்தில் ஹீரோ, இயக்குநர் என இரு பொறுப்பு. இதை எப்படி வரவேற்பார்கள் என்ற யோசனை இருந்தது. அந்த சமயத்தில் தான் லிட்டில் ஹார்ட்ஸ் வெளியானது. அது தந்த நம்பிக்கையில் தான் நான் என்னுடைய படத்தை இயக்கினேன்.

இந்தப் படம் ஒரு மாணவனின் 10வது ரிசல்ட் சமயத்தில் ஆரம்பித்து, அவனது 12வது வகுப்பின் போது முடியும். இந்த இரண்டு வருடங்களில் அவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்கள் எல்லாம் தான் கதை. அந்த காலகட்டத்தில் அவன் உணர்ந்து கொள்ளும் முக்கியமான விஷயத்தை பற்றி படம் கூறும்.

Dhanush
Dhanush
Dhanush, Ken Karunas
`ஜனநாயகன்' மறு ஆய்வு நிறைவு... இனி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையிலா? | Jana Nayagan | Vijay

தனுஷ் சார் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை, ட்ரெய்லர் மட்டும் தான் பார்த்தார். அவர் இருக்கும் பிசியில் என் பட நிகழ்வுக்கு வந்ததே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கடைசி நேரத்தில் தான் வருகிறேன் என்றே சொன்னார். ட்ரெய்லரை பார்த்துவிட்டு, `இந்தப் படம் மூலம் நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ, அது ட்ரெய்லரிலேயே புரிகிறது என்றார். மேலும் அந்த நிகழ்வு முடிந்ததும், அவர் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். பின்னர் போன் செய்து, நிகழ்வு நன்றாக இருந்தது. இனிமேல் ரிலீஸில் கவனம் செலுத்து. பட வெளியீட்டுக்கு பின் பேசுவோம்' என்றார்.

நான் வாத்தி படத்தில் நடித்தேன், உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். அப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி சாருக்கு பெரிய நன்றி, உங்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் எனக்கு உதவியாக இருந்தது. அந்தப் படத்தின் பணியாற்றிய போது ஐந்து மாதங்கள் ஹைதராபாத்தில் இருந்தேன். அப்போது பவன் கல்யாண் சாரின் `பீம்லா நாயக்' வெளியானது. வாத்தியில் இருந்த சம்யுக்தா மேனன் அதிலும் நடித்திருந்தார். எனவே அந்தப் படம் பார்க்க போனேன். அப்போதுதான் தெரிந்தது, தெலுங்கு ரசிகர்கள் படத்தை பார்ப்பதை தாண்டி கொண்டாடுவார்கள் என்று. பின்னர் தான் அதை அவரின் ஒவ்வொரு படத்துக்கும் செய்வார்கள் என தெரிந்தது. யூத் படம் வெளியாகும் அதே நாளில், பவன் சாரின் உஸ்தாத் பகத் சிங் வெளியாகிறது. யூத் படத்தை பல முறை பார்த்துவிட்டேன். எனவே நான் ரிலீஸ் அன்று பவன் சார் படத்துக்கு தான் போவேன்.

உங்களுக்கு எவ்வளவு ஸ்டெரஸ் இருந்தாலும் பரவாயில்லை. யூத் பார்த்து ஜாலியாக சிரித்து ரசிக்கலாம். படம் முடிந்த பின் உங்கள் அம்மா அப்பாவை யோசித்து பார்ப்பீர்கள்." என்றார்.

Dhanush, Ken Karunas
`ஜனநாயகன்' மறு ஆய்வு நிறைவு... இனி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையிலா? | Jana Nayagan | Vijay

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com