Pradeep Ranganathan
Pradeep RanganathanLIK

பிரதீப் ரங்கநாதனின் `LIK' ரிலீஸ்... ஹிண்ட் கொடுத்த விக்னேஷ் சிவன்? | Pradeep Ranganathan

செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என பலமுறை இப்படத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
Published on

`கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து `லவ் டுடே', `டிராகன்', `ட்யூட்' படங்கள் மூலம் ஹீரோவாகவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். இதற்கடுத்து அவர் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள `LIK'.

முதன் முதலில் இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் தீபாவளி வெளியீடாக பிரதீப் நடித்த `ட்யூட்' படம் அக்டோபர் 17 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் எப்படி ஒரே ஹீரோவின் படம் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே `LIK' படமும் அக்டோபர் 17 ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தி `LIK' படம் பின்வாங்க, `ட்யூட்' மட்டும் வெளியானது. அப்போது `LIK' படம் டிசம்பர் 18 வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பின்னர், காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதுவரை ரிலீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை.

Vignesh Shivan
Vignesh Shivan
Pradeep Ranganathan
"உள் நோக்கமும், எந்த லாப நோக்கும் இல்லை" சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன் | Parthiban

இந்த சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில்  "ஏப்ரல் 3. ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சினிமாவில் உள்ள அனைவரும் கூறுகிறார்கள்! இந்த வெள்ளிக்கிழமை அந்த புனித வெள்ளியாக அமையுமா!?" எனப் பதிவிட்டார். ஒருவேளை இது `LIK' படத்தின் ரிலீஸ் குறித்த பதிவாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது. 'LIK' படம் எதிர்கால உலகில் நடப்பதாக, அதாவது 2040-ல் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. எந்திரத்தனமான வாழ்க்கையில் உண்மையான காதல் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரு இளைஞன் என்ன விஷயங்களை எதிர் கொள்கிறான் என்பதே கதை. பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pradeep Ranganathan
மூன்றாவது முறையாக சுந்தர் சி உடன் இணையும் இயக்குநர்! | Sundar C

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com