\
Jason Sanjay
Jason SanjaySigma

"அப்பா எனக்கு கொடுத்த அட்வைஸ்.." ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல் | Jason Sanjay | Sigma

என் அப்பா அந்த துறை சார்ந்தவராக இருந்ததால் எனக்கும் அதன் மீது ஆர்வம் இருந்தது.
Published on
Summary

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். சிறுவயதிலிருந்தே சினிமா சூழலில் வளர்ந்த ஜேசன், வெளிநாட்டில் சினிமா படிக்க விருப்பம் தெரிவித்தபோது, தந்தை தயக்கமின்றி அனுமதி அளித்து, பல துறைகள் உள்ள இந்த கலை உலகை நேரில் கற்று, தன் உண்மையான ஆர்வத்தை கண்டுபிடிக்க வேண்டும் என உற்சாகமாக அறிவுரை கூறியதாக பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் `சிக்மா'. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நீங்கள் சினிமாவுக்கு போவதாக சொன்னதும், உங்களின் தந்தை என்ன அறிவுரைகள் கொடுத்தார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன ஜேசன் சஞ்சய் "சிறுவயதில் இருந்தே சினிமா எனக்கு பழக்கப்பட்ட ஒன்றாக தான் இருந்தது. என் நண்பர்கள் பலரும் அதனை பொழுதுபோக்காக பார்த்தனர். ஆனால் என் அப்பா அந்த துறை சார்ந்தவராக இருந்ததால் எனக்கும் அதன் மீது ஆர்வம் இருந்தது. நான் அவரிடம் கடல்கடந்து வெளிநாடு சென்று சினிமா பற்றி படிக்க விரும்புகிறேன் என சொன்னதும், அவர் தயங்கவே இல்லை, உடனே சம்மதித்தார். அவரும் இந்த துறையில் இருப்பதால் முதல் நபராக பச்சை கொடி காட்டியதே அவர் தான். என் அம்மா, தங்கையை விட அதிகம் இதில் புரிதல் உள்ளவரும் அவரே.

Jason Sanjay
விஷாலுக்கு முதல் படமே வெற்றியாக அமைய வேண்டும்! - அஞ்சலி | Vishal | Anjali | Magudam

மேலும் சினிமா சார்ந்த நிறைய படிப்புகள் இருப்பது குறித்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அதன் மீது பலரும் ஊக்கம் கொண்டுள்ளனர், நிறைய கற்றுக்கொள்ள கிடைக்கிறது. எனவே அவர் சினிமாவில் பல துறைகள் உள்ளன, நீ போய் படி அப்போதுதான் உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று தெரியும். உனக்கு இந்த துறை புடித்திருக்கிறதா என்பது புரியும் என சொல்லி அனுப்பி வைத்தார். அவர் மிகவும் ஆதரவு தந்தார்." என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com