
வர்ஷா பொல்லம்மா நடிப்பில் உருவான சீரிஸ் `Constable Kanakam'. கடந்த சீசனில் தொலைந்துபோன சிறுமியை தேடுவதே கதையாக இருந்தது. இந்த சீசனில் வரும் புதிய சிக்கலும், அதன் தீர்வுமாக நகரும்.
நிகில் அத்வானி இயக்கியுள்ள சீரிஸ் `Freedom at Midnight '. ஆகஸ்ட் 16, 1946லிருந்து ஜனவரி 30, 1948 வரையிலான 20 மாதங்கள் இந்திய அரசியலில் என்னென்ன நடந்தது என்பதே முதல் சீஸனின் கதை. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் என்னென்ன சிக்கல்கள் வந்தது என்பதே இந்த சீஸனின் கதை.
2016இல் வெளியாகி பெரிய ஹிட்டான சீரிஸ் `The Night Manager'. 10 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகவுள்ளது. ஒரு உளவாளியின் விறுவிறுப்பான மிஷனே கதை. முதல் சீசன் இந்தியில்கூட அதே பெயரில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.
Brett Haley இயக்கியுள்ள படம் `People We Meet on Vacation'. பாப்பி - அலெக்ஸ் இருவருக்குமான ஒருவார பயணமே கதை.
ஹரீஷ் ரெட்டி இயக்கிய படம் `Jigris'. நான்கு நண்பர்கள் பணம், ஐடி, மொபைல் என எதுவும் இல்லாமல் கோவா செல்கிறார்கள். அதன்பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
உமேஷ் சுக்லா இயக்கிய படம் `Heer Express' கிராமத்திலிருந்து வரும் பெண், சமூக கட்டமைப்புகளால் சந்திக்கும் சிக்கல்களே கதை.
Joachim Rønning இயக்கிய படம் `Tron: Ares'. 2010ல் வெளியான `Tron: Legacy' படத்தின் சீக்குவலாக உருவாகியுள்ளது. புத்திசாலித்தனமான Ares என்ற புரோக்ராம் நிஜ உலகத்திற்கு வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
Zach Cregger இயக்கிய படம் `Weapons'. ஒரு வகுப்பை சேர்ந்த குழந்தைகள் ஒரே இரவில் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். அதற்கு பின் இருக்கும் மர்மமே கதை.
விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்த படம் `மாஸ்க்'. ஒரு கொள்ளை யார் யாரை எல்லாம் பாதிக்கிறது, அதன் தீர்வு என்ன என்பதே கதை.
விபின் இயக்கத்தில் கீதா கைலாசம் நடித்த படம் `அங்கம்மாள்'. குடும்பம் மொத்தமும் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு தரும் ஒரு அழுத்தமும், அதை சுற்றிய நிகழ்வுகளுமே கதை.
போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த படம் `அகண்டா 2 தாண்டவம்', சென்ற பாகத்தில் குடும்பத்தை காப்பாற்றியவர், இந்த பாகத்தில் உலகத்தையே காப்பாற்றுகிறார்.
அன்ஷுல் சர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த படம் `De De Pyaar De 2'. வயது வித்தியாசத்தால் ஒரு காதல் ஜோடி சந்திக்கும் பிரச்சனைகளே கதை.
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. வளர்ப்பு மகளை காப்பாற்றும் முயற்சியில், ஹீரோ என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார் என்ற கேசரியில், அரசியல் கலந்து உருவாகியிருக்கிறது படம்.
பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கியுள்ள படம் `The Raja Saab'. பரம்பரை சொத்தை விற்க சென்று அந்த வீட்டிலேயே தங்கும் ஹீரோ எதிர்கொள்ளும் அமானுஷ்யங்களே கதை.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் `பராசக்தி'. மொழிப்போர் பின்னணியில் இரு சகோதரர்களுக்கு இடையே வரும் மோதலும், அதன் விளைவுகளுமே கதை.