\
Indrans
IndransNanban

நண்பன் படத்தில் சின்ன ரோலில் நடித்தது ஏன்? - இந்திரன்ஸ் சொன்ன காரணம்! | Indrans | Nanban

அவரை (விஜய்) பார்க்க எனக்கு நண்பன் படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பலராலும் கொண்டாடப்படும் நடிகர். அவர் செய்யும் படங்கள் எல்லாம் பெரிய அளவில் ரசிக்கப்படும்.
Published on
Summary

இந்திரன்ஸ் அளித்த பேட்டியில், நண்பன் படத்தில் சிறிய கதாபாத்திரம் ஏற்க காரணம் விஜயை நேரில் காணும் ஆசை என்றும், அவருடன் ஒரு காட்சியிலாவது நடிப்பது தான் பெரிய சாதனை என்றும் கூறினார். இயக்குநர் ஹெச். வினோத் செட் அமைதியாக இருக்கும் விதம், அவர் தரும் வழிகாட்டுதல் அனைத்தும் அடூர் படப்பிடிப்பு தளத்தை நினைவூட்டியதாகவும் பாராட்டினார்.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு வசூலும், வரவேற்பும் மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ளன. இதில் மட்டாஞ்சேரி சுகுமாரன் என்ற பாத்திரத்தில் நடித்த இந்திரன்ஸின் நடிப்பு பரவலாக பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Nanban
Nanban

சமீபத்தில் இவர் அளித்திருந்த ஒரு பேட்டியில் நண்பன் படத்தில் மிக சிறிய ஒரு பாத்திரத்தில் நடித்தது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன இந்திரன்ஸ் "அவரை (விஜய்) பார்க்க எனக்கு நண்பன் படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஒரு காட்சியில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அவர்கள் பலராலும் கொண்டாடப்படும் நடிகர். அவர் செய்யும் படங்கள் எல்லாம் பெரிய அளவில் ரசிக்கப்படும். அவருடன் நடிப்பது என்பது எனக்கு பெரிய விஷயம்.

Indrans
"உண்மை என்னனு சொன்னா... " ஜனநாயகன் பற்றி பேசிய ஹெச் வினோத் | H Vinoth | Jana Nayagan

இயக்குநரும் மிகப்பெரிய இயக்குநர். அவர் ஆக்ஷன் சொல்லி நான் நடிப்பது ஒரு பாக்கியம் தான் எனக்கு. அடூர் சாரின் படப்பிடிப்பு தளம் போல, நிறைய பேர் பணியாற்றினாலும், செட் மொத்தமும் அமைதியாக இருக்கும். அவர் வந்து மிக சகஜமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வார். விஜய் சாருடன் ஒரு காட்சியிலாவது நடித்தால் போதும் என நினைத்தேன், அது நடந்துவிட்டது." என்றார்.

Indrans
ரன்வீருக்கு எதிராக பாலிவுட்.. துரந்தர் நாயகனுக்கு வந்த சிக்கல்! | Ranveer Singh | Farhan Akhtar
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com