புது லுக்கில் விஜய்.. ரிலீஸ் தேதியை சொன்ன GOAT படக்குழு! போஸ்ட்டரில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

நடிகர் விஜய்யின் GOAT பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கெட்டப்புடன் வெளியாகியுள்ள போஸ்ட்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
goat vijay
goat vijaypt

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT - The Greatest Of All Time படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வபோது வெளியாகி வரும் சூழலில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது. அப்பா, மகன் லுக்கில் விஜய் இருப்பது போல போஸ்ட்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

1970களில் விமானத்தை ஹைஜேக் செய்து பணத்தை திருடிவிட்டு மாயமான டி.பி கூப்பரின் கதையை தழுவிதான் கோட் படம் எடுக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாகவே பொங்கல் அன்று வெளியான செகண்ட் லுக் போஸ்ட்டரும் அமைந்தது.

goat vijay
DEAR | Fallout | Romeo | Aavesham | Varshangalkku Shesham ... உங்கள் சாய்ஸ் என்ன..?

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள போஸ்ட்டரில் சால்ட் & பெப்பர் கலர் ஹேர் ஸ்டைலில் நடிகர் விஜய் இடம்பெற்றிருக்கிறார். கோவத்தில் எதையோ சிந்திப்பது போல உள்ள இந்த போஸ்ட்டரில் விமான டிக்கெட்டுகள், பாஸ்போர்ட் ஸ்டாம்ப் போன்றவை அதிகம் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 5ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட்டரில் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வது போன்ற டிக்கெட்டுகளும், அதில் 16 பிப்ரவரி 2003 என்ற தேதிகளிலும் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பார்த்தால், டி.பி கூப்பரின் வாழ்க்கை வரலாறுதான் கோட் படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

goat vijay
"அன்பும், நிம்மதியும் நிலைக்க, நல்லிணக்கம் வளர.." - தமிழக அரசியல் தலைவர்கள் ரமலான் பண்டிகை வாழ்த்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com