நடிகர் விஜய் தனது தாய்க்காக கட்டிய சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்!

நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலில் விஜயின் தாயுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்தார்.
ஷோபா ராகவா லாரன்ஸ்
ஷோபா ராகவா லாரன்ஸ்PT

நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலில் விஜயின் தாயுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்தார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் தனக்கு சொந்தமான இடத்தில் தனது தாய்க்காக சாய்பாபா கோவில் கட்டி முடித்து கடந்த பிப்ரவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்.

ஷோபா ராகவா லாரன்ஸ்
கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இந்தியாவின் IT தலைநகரம்... பின்னணி என்ன?

அன்று நடிகர் விஜய் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியது. கும்பாபிஷேகம் அன்று நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த நிலையில் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகருடன் நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ காட்சி ஒன்று பகிர்ந்துள்ளார். அதில் கோயிலுக்குள் நுழையும்போது விஜயின் தாய் ஷோபா வின் காலில் விழுந்து ஆசி பெற்று கோவிலில் சாமி தரிசனம் செய்து கோவிலில் சுத்தி பார்க்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com