Dhanush, Andrea
Dhanush, AndreaIdhu Maalai Nerathu Mayakkam

"தனுஷ், ஆண்ட்ரியா படம் Interval வரை எடுத்த செல்வா.." ராம்ஜி சொன்ன ரகசியம் | Selvaraghavan | Dhanush

அந்த வெர்ஷனை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் `அவதார்' படம் வந்திருந்த நேரம். நாங்கள் அந்தப் படத்தில் fluorescent பெயிண்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி இருந்தோம்.
Published on
Summary

செல்வராகவன் இயக்கத்தில் முதலில் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் 'இது மாலை நேரத்து மயக்கம்' என்ற பெயரில் தொடங்கிய படம், இடைவேளை வரை தயாராகி இருந்தது. ஆனால், செல்வா அதை கைவிட்டு, ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' என்ற புதிய படத்தை உருவாக்கினார். இதை ராம்ஜி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கி 2011ல் வெளியான படம் `இரண்டாம் உலகம்'. முதலில் இந்தப் படம் துவங்கப்பட்ட அதற்கு முன் இந்தப் படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா தான் `இது மாலை நேரத்து மயக்கம்' என்ற பெயரில் நடித்தனர். பின்னர் அந்தப் படம் கைவிடப்பட்டு, ஆர்யா அனுஷ்கா நடிப்பில் உருவானது. இது பற்றி சமீபத்தில் அப்பட மற்றும் செல்வராகவனின் பல படங்களின் பணியாற்றிய ராம்ஜி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

அவர் சொல்லும் போது " `இரண்டாம் உலகம்' படத்தை முதலில் தனுஷ் - ஆண்ட்ரியா நடிப்பில் தான் எடுத்தோம். இடைவேளை வரை படம் தயாராகிவிட்டது, இப்போதும் அந்தப் படம் இருக்கிறது. ஆனால் அதை அப்படியே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டார் செல்வா. எல்லோருமே நன்றாக இருக்கிறதே எனக் கூறியும், அவர் அதை தொடர மறுத்து புதிய ஒன்றை எடுக்கலாம் என சொன்னார்.

Ramji
Ramji
Dhanush, Andrea
TK - VJS கூட்டணியில் `பாக்கெட் நாவல்' | Thiagarajan Kumararaja | Pocket Novel

அந்த வெர்ஷனை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் `அவதார்' படம் வந்திருந்த நேரம். நாங்கள் அந்தப் படத்தில் fluorescent பெயிண்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி இருந்தோம். அவதாரிலும் அந்த டோன் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் செல்வா பயந்தார். கதை வேறாக இருந்தாலும், ஆனால் தோற்றத்தில் ஒற்றுமை இருக்கிறதே என நினைத்து அதையும் கைவிட்டார். அதன் பின்னும் 28 நாட்கள் ஒரு படம் எடுத்தோம், அதுவும் சில காரணங்களால் தொடர முடியாமல் போனது. அப்புறம் எடுக்கப்பட்டது தான் இப்போது இருக்கும் `இரண்டாம் உலகம்'." என்றார்.

Dhanush, Andrea
'எங்கள் வாழ்வில் பெரிய தருணம்..' விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண அழைப்பிதழ்? | VDS | Rashmika

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com