Dhanush
DhanushIdly Kadai

4 வசனம்.. 4 சம்பவம்.. - தனுஷ் பகிர்ந்த விஷயம் | Dhanush | Idly Kadai

16 வயதில் கேமிரா முன்னால் நான் வந்து நின்ற போது இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்றார்கள். அப்போது ஆரம்பித்த ஸ்விம்மிங். இன்னும் ஸ்விம்மிங் போடுகிறேன்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள `இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு சென்னையிலும், ட்ரெய்லர் வெளியீடு கோவையிலும் நடத்திய படக்குழு, மதுரையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்வை நேற்று மாலை நடத்தினர்.  இந்த நிகழ்வில் தனுஷின் பட வசனங்களை கூறி, இது தனுஷின் வாழ்வில் எந்த தருணத்தில் பொருந்தும் என வரிசையாக வசனங்களை முன்வைத்தார் தொகுப்பாளர்.

1. நாங்கல்லாம் சுனாமிலேயே ஸ்விம்மிங்க போடுறவைங்க

Dhanush
DhanushAadukalam

என் வாழ்க்கையே அதுதான். சுனாமியில் தான் ஸ்விம்மிங் போடுகிறேன். 16 வயதில் கேமிரா முன்னால் நான் வந்து நின்ற போது இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்றார்கள். அப்போது ஆரம்பித்த ஸ்விம்மிங். இன்னும் ஸ்விம்மிங் போடுகிறேன்.

Dhanush
"காசாவை நிர்மூலமாக்க வேண்டும்" - இஸ்ரேலின் குறிக்கோளால் தவிக்கும் காசா மக்கள்

2. சேட்டை புடிச்ச பய சார், சும்மா ஜாலிக்கெல்லாம் இம்சை பண்ணுவான்

Dhanush
DhanushMaari

சின்ன வயதில் கொஞ்சம் சேட்டை பிடித்த பையன்தான் நான். ஆனால், என்னை விட என் அண்ணன்தான் சேட்டை பிடித்த பையன். அவரைவிட நான் எட்டு வயது சிறியவன். கிரிக்கெட் விளையாட கூப்பிடுவார். எப்படியாவது பேட்டிங் வாங்கி விடுவார். அவர் பெரியவர் என்பதால் என்னால் அவுட் செய்ய முடியாது. 3 மணி நேரம் பால் போடுவேன். அவர் அவுட் ஆகும் நேரம் பேட்டை தூக்கி போட்டு சென்றுவிடுவார். நான் தீனி வாங்குவதற்காக காசு சேர்த்து வைப்பேன். அதை அவர் திருடி சென்றுவிடுவார். இப்படி அதிகமான சேட்டை பிடித்த பையன் அவர்தான். இந்த அண்ணன்களுக்கு தம்பியை டார்ச்சர் செய்வதில் என்ன தான் சந்தோஷமோ.

Dhanush
கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

3. ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்

Dhanush
DhanushVada Chennai

கரெக்ட் தான் ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும். ஆனா சண்டையை படிப்பில், உழைப்பில் செய்யுங்கள். சண்டை நமக்குள் இருக்க வேண்டும். இன்று இருக்கும் இடத்தை விட நாளை இருக்கும் இடம் சிறந்ததாக இருக்க வேண்டும். அதற்காகதான் சண்டை இருக்க வேண்டும்.

Dhanush
”இருக்கும் கூட்டணி கூட பிரியலாம்..” பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக கடம்பூர் ராஜூ பேச்சு!

4. நம்மகிட்ட காடு இருந்த எடுத்துக்கிடுவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுக, ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாதது சிதம்பரம்

Dhanush
DhanushAsuran

இதற்கு எந்த விளக்கமும் தேவை இல்லை. இதுவரை கேட்டதிலேயே இதுதான் சிறந்த வசனம். 

மேலும் தொகுப்பாளர் "எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறீர்கள். எப்போது ஓய்வு எடுப்பீர்கள், எப்போது ஜாலியாக இருப்பீர்கள்? எனக் கேட்க, ரசிகர்களை கை காட்டி "இதுதான் ஜாலி" என்று சொன்னவர், "என் பசங்களோடு செலவிடும் நேரம் தான் என்னுடைய ரிலாக்சிங் டைம்" என்றார்.

"உங்களிடம் ரசிகர்கள் பல விஷயங்களை ரசிப்பார்கள், நீங்கள் அவர்களிடம் ரசிக்கும் விஷயம் என்ன?"  எனக் கேட்க, "என்றும் மாறாமல் நிரந்தரமாக இருப்பது. யாரிடமும் வம்புக்கு போகாதா குணம், ஆனால் இவர்களை பார்த்தாலே தெரியும் இவர்களிடம் வம்புக்கும் போகக் கூடாது. அவர்களில் ஒருவனாக இருந்த என்னை இப்படி வைத்திருக்கிறார்கள். அந்த அன்பு மிகவும் பிடிக்கும்." என்றார்

Dhanush
”குறிக்கோள் ஒன்றுதான்” - சென்னை வந்தது குறித்து தெளிவுபடுத்திய செங்கோட்டையன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com