
Jack Bender இயக்கத்தில் உருவாகியுள்ளது From சீரிஸின் 4வது பாகம். ஒரு குறிப்பிட்ட நகரத்துக்குள் சிக்கிக் கொண்டு அங்கிருந்து தப்ப முடியாதவர்கள் பற்றிய கதை.
Jim Loach, Philippa Langdale இயக்கியுள்ள சீரிஸ் `Unchosen'. கிறிஸ்தவ குழுவின் அங்கமான ரோஸியின் வாழ்க்கை பயணமே கதை.
ஐந்து சீசன்களாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான `Stranger Things' சீரிஸின் அனிமேஷன் spin-off வெர்ஷன் தான் `Stranger Things: Tales from ’85'. லெவன் மற்றும் அவளது நண்பர்கள் நகரத்தில் இருக்கும் மர்மத்தை எப்படி தீர்க்கிறார்கள் என்பதே கதை.
Baltasar Kormákur இயக்கியுள்ள படம் `Apex'. மலை ஏற்றத்துக்கு செல்லும் பெண் ஒரு வேட்டைக்காரனால் துரத்தப்படுகிறார். அதன் பின் என்ன என்பதே கதை.
Cyrus Nowrasteh இயக்கிய படம் `Sarah's Oil'. நிலத்துக்கடியில் எண்ணெய் வளம் இருப்பதை கண்டறியும் சிறுமியின் கதை.
பாலா சதீஷ் இயக்கிய படம் `Mension House Mallesh'. ஒரு புதுமணத்தம்பதிக்கு வரும் சிக்கலே கதை.
ஹர்ஷ், ஸ்ரீதேவி நடித்த படம் `Band Melam'. சிறு வயதில் பிரிந்த கிரி - ராஜி மீண்டும் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதே கதை
நிவின் பாலி நடித்த படம் `Prathichaya'. தந்தையின் அரசியல் செல்வாக்கை காக்கும் பொறுப்பு மகனுக்கு வரும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.
ஷராஃபுதீன் நடித்துள்ள படம் `Madhuvidhu'. ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் வீட்டில் வசிக்கும் மணமகன் அமிர்தராஜின் திருமணத்துக்கு ஏற்படும் தடைகளே கதை.
தீப்தி இயக்கியுள்ள படம் `Achappa's Album'. அப்பாவின் வாழ்க்கையை மகனும், மகனின் வாழ்க்கையை அப்பாவும் புரிந்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு ஃபேண்டஸி பயணமே கதை.
அவினாஷ் திவாரி, மேதா ஷங்கர் நடித்துள்ள படம் `Ginny Wedss Sunny 2, தொழில்முறை மல்யுத்த வீரரின் வாழ்க்கை, ஒரு பெண்ணை சந்தித்த பின் மாறுகிறது. என்ன நடக்கிறது என்பதே கதை.
David Mackenzie இயக்கியுள்ள படம் `Fuze'. இரண்டாம் உலகப்போரின் குண்டு, ஒரு பரபரப்பான கட்டவேலை நடக்கும் இடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. அதனை அப்புறப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களே கதை.
மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்காக உருவாகியுள்ளது `Michael'.