சூர்யாவின் `கருப்பு' பட இசை வெளியீட்டு விழா எப்போது? | Suriya | Karuppu | R J Balaji
சாய் அப்யங்கர் இசையமைக்கும் ‘கருப்பு’ படத்திலிருந்து ‘God Mode’, ‘நாங்க நாலு பேரு’, ‘ராத்து ராசன்’ போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், முழு ஆல்பமும் ஏப்ரல் 26 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் மதுரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் யார் சிறப்பு விருந்தினராக வருவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான `எதற்கும் துணிந்தவன்', `கங்குவா', `ரெட்ரோ' போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே `கருப்பு' படத்தின் வெற்றி மிக முக்கியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே அப்படத்தின் புரமோஷன்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் சூர்யா. எனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக மதுரையில் ஏப்ரல் 26ம் தேதி நடத்த இருக்கிறார்களாம்.
சாய் அப்யங்கர் இசையில் ஏற்கெனவே `God Mode', `நாங்க நாலு பேரு', `ராத்து ராசன்' போன்ற பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன. முழு ஆல்பமும் ஏப்ரல் 26 வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக யார் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படத்துக்கு பிறகு வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகிவரும் `சூர்யா 47' படம் தயாராகி வருகிறது.

