அல்லு அர்ஜூனின் `ராக்கா' லுக்.. தினமும் மேக்கப்புக்கு 4 மணிநேரம்! | Allu Arjun | Raaka
இந்திய திரையுலகில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது அட்லீ இயக்கும் `ராக்கா' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். மேலும் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
VFX தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்த லுக்கை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, அல்லு அர்ஜூனின் சிக்னேச்சர் கை அசைவை ரீகிரியேட் செய்திருந்தார்.
தற்போது அல்லு அர்ஜூனின் இந்த புதிய லுக் பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி புஷ்பாபோல மீண்டும் ஒருமுறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் அல்லு அர்ஜூன். அதற்கானதுதான் ராக்காவில் வரும் இந்த புதிய தோற்றமாம். படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தோற்றத்தை கொண்டுவர தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறதாம்.
அல்லு அர்ஜூனின் 22ஆவது படமாக உருவாகிவரும் இந்தப் படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், த்ரி விக்ரம், பேசில் ஜோசப் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அல்லு அர்ஜூன்.

