Vignesh Shivan, SJ Suryah
Vignesh Shivan, SJ SuryahLIK

"வேட்டி கசங்கும் என பல மணிநேரம் நின்று கொண்டே இருந்தார்..." எஸ் ஜே சூர்யா பற்றி விக்னேஷ் சிவன் | LIK

எஸ் ஜே சூர்யா சாரின் குறிக்கோள் மிகப்பெரியது. இவரை ஒவ்வொரு முறை பார்க்கையில் ஒவ்வொரு பெயரை அவருக்கு வைப்பேன். Dedication என்பதை குறிக்கும்படி dedic என்பேன், Sincerity-ஐ குறிக்கும்படி Sincy என்பேன்.
Published on
Summary

விக்னேஷ் சிவன் இயக்கிய `LIK' பட பேட்டியில், எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பு, சின்சியரிட்டி குறித்து அவர் வியப்புடன் பகிர்ந்துகொள்கிறார். கல்லூரி காலத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தபோது பார்த்த அதே உழைப்பை, இன்று ஹீரோவாகவும் தொடர்கிறார். காயம் இருந்தும் வேட்டி கசங்காதிருக்க பல மணி நேரம் நின்று நடித்த சம்பவம், அவரது தொழில்முறை ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK'. இப்படத்தின் சார்ந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் பணி புரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் "நான் கல்லூரி படிக்கும் சமயத்தில் எஸ் ஜே சூர்யா சாரின் அன்பே ஆருயிரே படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். அப்போது இரவு 2 மணிக்கு சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அப்படியே தூங்கிவிடுவார். மறுபடி ரெடி என சொன்னால் எனர்ஜியாக எழுந்து செல்வார். அப்படி பார்த்து வியந்த ஒருவருடன் இன்று வேலை செய்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

SJ Suryah
SJ Suryah

எஸ் ஜே சூர்யா சாரின் குறிக்கோள் மிகப்பெரியது. நான் என் வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரை பார்த்ததில்லை. இவரை ஒவ்வொரு முறை பார்க்கையில் ஒவ்வொரு பெயரை அவருக்கு வைப்பேன். Dedication என்பதை குறிக்கும்படி dedic என்பேன், Sincerity-ஐ குறிக்கும்படி Sincy என்பேன். படத்தின் ஒரு காட்சியில் இவர் வேஷ்டி சட்டை அணிந்து நடிக்க வேண்டிய காட்சியை எடுத்தோம். இரவு அந்தக் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தோம், மணி 8 ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யா சார் அமராமல் நின்று கொண்டே இருந்தார். ஏன் சார் நிற்கிறீர்கள் என்றேன் பரவாயில்லை என்றார். 10 மணிக்கு திரும்ப வந்து பார்த்தால் அப்போதும் நின்று கொண்டே இருந்தார், உட்காருங்கள் சார் என்றேன் பரவாயில்லை என்றார். 

SJ Suryah
SJ Suryah
Vignesh Shivan, SJ Suryah
சூர்யாவின் `கருப்பு' பட மூன்றாவது பாடல் வெளியீடு! | Suriya | Karuppu | R J Balaji

மணி 12 ஆகிவிட்டது எல்லோரும் சாப்பிட்டோம், அப்போதும் நின்று கொண்டே சாப்பிட்டார். என்ன பிரச்னை என்று கேட்டால் `வேட்டி அணிந்திருக்கிறேன் சார், உட்கார்ந்தால் எங்கே கசங்கும் என தெரியாது. பின்னர் அது வைட் எடுக்கும் போது தெரிந்தால் நன்றாக இருக்காது' என்றார். கொசுவுக்கெல்லாம் குடை பிடிக்கிறாரு என்பது போல, வேட்டி கசங்கும் என்பதற்காக நிற்கிறார். பின்னர் அவர் காலில் ஆயின்மென்ட் தேய்க்கையில் பார்த்தால் `சரிபோதா சனிவாரம்' படத்தின் ஷூட்டிங்கில் அடி பட்டு கால் முழுக்க காயம். அந்த காயத்தோடு இவ்வளவு நேரம் நின்றிருக்கிறார். இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அவ்வளவு சின்சியர்." என்றார்.

Vignesh Shivan, SJ Suryah
`ஜோ' பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி வி பிரகாஷ்! | G V Prakash

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com