”வீட்டில் நிம்மதி இல்லையென்றால் எதுவுமில்லை”.. கூலி பட விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய அனுபவங்கள்..!
கூலி படம் ட்ரெய்லர் வெளியான விழாவில் ரஜினி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படத்தில், ரஜினிகாந்த் மட்டுமின்றி, நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 3 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர் முழுவதுமே, அதிரடியான மற்றும் பரபரப்பான காட்சிகள் நிறைந்துள்ளன. துறைமுகத்தை மையப்படுத்தியுள்ள கதை என்று பறைசாற்றும் ட்ரெய்லரில், ரஜினிகாந்த்தின் பாட்ஷா, தளபதி, பேட்ட திரைப்படங்களை நினைவூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாகார்ஜூனின் குரலில் தொடங்கும் ட்ரெய்லர், ரஜினிகாந்த்தின் வசனத்துடன் நிறைவடைகிறது.
கூலி பட விழாவில் பேசிய ரஜினி..
பவர்ஃபுல்லான ஃப்ளாஷ்பேக்கை கொண்ட திரைப்படமாக இருக்கக் கூடும் என்றும், ட்ரெய்லரில் வரும் காட்சிகள் கூறுகின்றன. மொத்தத்தில் ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் என அடித்துக் கூற முடியும். எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதியும் வெளியே கவுரவுமும் இல்லையென்றால், எதுவுமே இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கூலி பட விழாவில் பேசிய அவர், கூலி படத்தின் உண்மையான கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் என பாராட்டு தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் கமல் ரசிகன்
தான் 1950 மாடல் எனவும், உடலில் பார்ட் எல்லாம் மாற்றி இருக்கிறார்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறியதாகவும், எனவே பார்த்து ஆட வைக்குமாறு டான்ஸ் மாஸ்டரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். லோகேஷ் கனகராஜ் தான் கமல் ரசிகன் என என்னிடம் கூறியதாக குறிப்பிட்ட ரஜினிகாந்த், நீங்கள் யார் ரசிகன் என நான் கேட்டேனா எனவும், லோகேஷ் கனகராஜை நோக்கி நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பினார்.
முதல்முறையாக அழுத ரஜினி
லோகேஷ் நீண்ட நேரத்திற்கு நேர்காணல்கள் அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தூங்கி எழுந்து பார்த்தாலும் நேர்காணல் முடியவில்லை என கிண்டலாக தெரிவித்தார். லக்கேஜ் தூக்கும் வேலை செய்யும்போது, தன்னை கண்ட கல்லூரி நண்பன், எவ்வளவு ஆட்டம் ஆடினாய் என கேட்டுவிட்டு சென்றதாக கூறிய ரஜினிகாந்த், அப்போதுதான் முதல்முறையாக அழுதேன் எனவும் நினைவுகூர்ந்தார்.
தனது தந்தையும் ஒரு பேருந்து நடத்துநர் என பெருமையாக சொன்ன லோகேஷ் கனகராஜ்
கூலி படம் தனது வாழ்க்கைக்கு பாடம் என, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கூலி படத்தின் இசை
மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது வாழ்வில் இனி அமைதியாகவோ பெருமையுடனோ இருந்தால், அதற்கு ரஜினிதான் காரணம்
என தெரிவித்தார். தனது தந்தை ஒரு பேருந்து நடத்துநர் என குறிப்பிட்ட அவர், தனது தந்தை பயன்படுத்திய எண்ணையே, படத்தில் ரஜினியின் பேட்ஜ்ஜில் பயன்படுத்தியதாக கூறினார். நாகார்ஜுனாவை பார்த்துதான் சிகை அலங்காரம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.