aug 03 2025 morning headlines news
PM ModiFB

HEADLINES|கூலி பட விழாவில் கவனத்தை ஈர்த்த ரஜினி பேச்சு முதல் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த மோடி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி மறைமுக பதில், ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, கூலி பட விழாவில் கவனத்தை ஈர்த்த ரஜினிகாந்தின் பேச்சு உள்ளிட்ட பல்வேறு செய்திகளை விவரிக்கிறது.
Published on

1. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3ஆம் இடத்தை நோக்கி முன்னேறுவதாக பிரதமர் மோடி பேச்சு... இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதற்கு மறைமுகமாக விளக்கம்...

2. மக்களவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக ராகுல் காந்தி பேச்சு... முறைகேடு நடந்திருக்காவிட்டால் மோடி பிரதமராகியிருக்க முடியாது என்றும் கருத்து...

3. 3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன் டூ ஒன் சந்திப்பை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்... சட்டப்பேரவை தேர்தல் தாெடர்பாக நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்....

4. அமலாக்கத் துறைக்கு பயந்து திமுக அமைச்சர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர்... நெல்லை மாவட்டம் பணகுடியில் பிரச்சாரத்தின்போது பழனிசாமி விமர்சனம்....

5. பிரதமருடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரனை 6 முறை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அழைப்பை ஏற்கவில்லை... உண்மைக்கு மாறான தகவல் வெளியிடுவதை தவிர்க்குமாறு பன்னீர்செல்வம் அறிக்கை...

6. தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை... புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்... குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி.... 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.... 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு..

7. பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்... சென்னை திருவான்மியூரில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பலர் அஞ்சலி...

8. நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு... நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

9. இணையத்தில் ஒரு கோடி பார்வைகளை கடந்தது கூலி டிரைலர்... தெறிக்கவிடும் ஆக்சன் காட்சிகளை கண்டு ரசிகர்கள் உற்சாகம்... எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதியும், வெளியே கவுரவுமும் இல்லையென்றால், எதுவுமே இல்லை.... கூலி பட விழாவில் கவனத்தை ஈர்த்த ரஜினிகாந்தின் பேச்சு....

10. உடல் தகுதியை பொறுத்தே ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடுவது குறித்து முடிவெடுப்பேன்... சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோனி சூசக பதில்...

11. ஓவல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்கள் இலக்கு... கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு....

12. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.... செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் போட்டி நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு....

13. கனமழையால் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்... வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் அவசர நிலை அறிவிப்பு...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com