நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் ஜூனியர் பாலையா உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் பாலையா
ஜூனியர் பாலையாpt web

70 வயதான நடிகர் ஜூனியர் பாலையா சென்னை வளசரவாக்கத்திலுள்ள தன் வீட்டில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஜூனியர் பாலையா.

பிரபல நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு பாலையா. கடந்த ஜூன் மாதம் தனது 70 ஆவது பிறந்த நாளை அவர் கொண்டாடிய நிலையில் இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாகவும் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழந்துள்ளார். வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் பாலையா
’Friends’ தொடரின் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்

ஜூனியர் பாலையா ஜூன் 28 ஆம் ஆண்டு 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர். டி.எஸ். பாலையாவின் மூன்றாவது மகனான இவர் எண்ணற்ற திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளார். சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com