’Friends’ தொடரின் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்

உலகளவில் மிகப்பிரபலமான Friends தொடரின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் மேத்யூ பெர்ரி. இவர் தனது 54 வயதில் மரணமடைந்துள்ளார்.
 மேத்யூ பெர்ரி
மேத்யூ பெர்ரிமுகநூல்

உலகளவில் மிகப்பிரபலமான Friends தொடரின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் மேத்யூ பெர்ரி. 1994ஆம் ஆண்டு தான் இந்த வெப் தொடர் முதன் முதலில் ஒளிபரப்பாக துவங்கியது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2004 வரை 10 சீசன்களாக Friends தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

இந்த வெப் தொடரில் Jennifer Aniston, Courteney Cox, Lisa Kudrow, Matt LeBlanc, Matthew Perry, David Schwimmer உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் Chandler Bing கதாபாத்திரத்தில் நடித்து மேத்யூ பெர்ரி.

 மேத்யூ பெர்ரி
மேத்யூ பெர்ரிமுகநூல்

இந்நிலையில், அக்டோபர் 28ம் தேதி நடிகர் மேத்யூ பெர்ரி தனது 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிபடுத்தபடாத நிலையில், லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் இருக்கும் அவருடைய வீட்டின் குளியல் தொட்டியில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாய் கூறப்படுகிறது. அதனால், பெர்ரி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

 மேத்யூ பெர்ரி
சொல்வதற்கு காத்திருக்கும் கடந்த காலத்தின் “fiery story"! - தங்கலான் டீசர், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Friends தொடர் தவிர Fools Rush In, Almost Heroes, 17 Again உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார் பெர்ரி.

மேலும் திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com