“படத்தின் கடைசி 40 நிமிடங்கள்...” Jigarthanda Double X குறித்து தனுஷ் சொன்ன விஷயம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
தனுஷ்
தனுஷ்pt web

தீபாவளி பண்டிகையையொட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கார்த்தியின் ஜப்பான், எஸ்.ஜே சூர்யா - ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா இரண்டாம் பாகம், விக்ரம் பிரபு - ஸ்ரீ திவ்யாவின் ரெய்டு ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

ஜிகர்தண்டா
ஜிகர்தண்டாpt web

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நடிகை அனு இமானுவேல் நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜப்பான் கார்த்தியின் 25 வது படமென்பதால் அதன்மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமுள்ளது.

அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படமும் இன்று வெளியாகிறது. 1975ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் ஜானர் படமாக ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி வகையில் உருவாகியுள்ளது இப்படம். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளதால், அதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தனுஷ்
அடேங்கப்பா.. ஜப்பான் படத்தோட கதையே இதுதானா! தமிழ்நாட்டை உலுக்கிய 5 நகைக்கடை கொள்ளை சம்பவங்கள்!

இன்னொருபக்கம் நடிகர் ராகவா லாரன்ஸின் தாயார், ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ் திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் தரிசனம் செய்த வீடியோவும் வைரலாகி வருகிறது

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன் பதிவில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாக உருவாக்கியுள்ளார். மிகச்சிறப்பாக நடிப்பது எஸ்.ஜே.சூர்யாவிற்கு வழக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை மிக அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள், உங்கள் இதயத்தை கொள்ளை கொள்ளும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இணையத்திலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com