retro movie
retro moviex

காதலர் தினத்தை முன்னிட்டு ’கண்ணாடி பூவே’.. சூர்யாவின் ’ரெட்ரோ’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
Published on

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ’ரெட்ரோ’. சூர்யா ஜோதிகாவின் 2D Productions, கார்த்திக் சுப்புராஜின் Stone bence நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் ரெட்ரோ
சூர்யாவின் ரெட்ரோweb

ஒருபக்கம் பயங்கரமான ஹேங்ஸ்டர், மறுபக்கம் அனைத்திலிருந்தும் விடுபட்டு வாழ நினைக்கும் காதல் என படம் லவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

retro movie
’உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு..’ காதலர்களின் ஆல்டைம் ஃபேவரட் ’சச்சின்’! மீண்டும் ரீ-ரிலீஸ்!

முதல் பாடல் ‘கண்ணாடி பூவே’..

சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ரெட்ரோ படத்திற்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், படத்திற்கான முதல் சிங்கிள் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எப்போதும் தன்னுடைய இசையில் காதல் பாடல்களை புதுமையாக கொடுக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கண்ணாடி பூவேவில் என்ன செய்துள்ளார் என்பதை பார்க்க எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழலில் வெளியாகியிருக்கும் அப்டேட் போஸ்டரில் சூர்யா வெள்ளை யூனிஃபார்முடன் ஜெயிலில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை பாடல் பிரிவில் வாடும் காதலன் பாடுவது போல இருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

retro movie
‘ஜாலியா வாங்க, ஜாலியா போங்க’.. தனுஷின் ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் வெளியீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com