Puri Sethupathi
Puri SethupathiPuri Jagannadh, Vijay Sethupathi

விஜய் சேதுபதி படத்தில் சந்தீப் வங்கா கனெக்ட்! | PuriSethupathi | Vijay Sethupathi | Puri Jagannadh

இந்தப்படத்தின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.
Published on

தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குநர் பூரி ஜெகன்நாத். இவர் அடுத்து இயக்கும் படம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக #PuriSethupathi எனப் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா, தபு மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.

இந்தப்படத்தின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள். இந்த சூழலில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என அறிவித்துள்ளனர். சந்தீப் வங்காவின் `அர்ஜுன் ரெட்டி', `கபீர் சிங்', `அனிமல்' போன்ற படங்களில் தனது பின்னணி இசையால் கவனம் ஈர்த்த தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இந்த #PuriSethupathi படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Puri Sethupathi
யார் இந்த பி.ஆர்.கவாய்? ஏன் குறிவைக்கப்படுகிறார்?

`பத்ரி', `இடியட்', `போக்கிரி', `பிசினஸ்மேன்', `டெம்பர்' என கமர்ஷியல் மாஸ் படங்களை இயக்கி வரவேற்பு பெற்ற பூரி ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளாக இயக்கிய படங்களில் iSmart Shankar தவிர வேறு எந்த படமும் ஹிட்டாகவில்லை. எனவே இந்த முறை அவரது படம் ஹிட் ஆகுமா என எதிர்பாத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Puri Sethupathi
முடிவுக்கு வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. முதற்கட்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com