ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட்
ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் R S infotainment

மீண்டும் இணையும் வெற்றிமாறன் தனுஷ்..!

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் தயாரிக்கும் அடுத்த இரு படங்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

விடுதலை 2 படம் வெளியாகி 25 நாட்கள் கடந்து ஓடிக் கொண்டிருப்பதை குறிப்பிட்டு அதற்கு நன்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட். அதில் அவர்கள் தயாரிக்கும் அடுத்த இரு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட்
Vanangaan Review | அழுத்தமும் இல்ல.. தெளிவும் இல்ல.. பழமைவாதத்தில் மூழ்கித்துடிக்கும் 'வணங்கான்'

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அதில் ஒன்று. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு வெற்றி படங்களை கொடுத்த கூட்டணி ஐந்தாவது முறையாக இணைகிறது. விடுதலை 2 வெற்றிமாறனின் 7வது படம். அவரின் 9வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். எனவே வாடிவாசல் படத்திற்கு பின்பே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணையும் எனது தெரிகிறது.

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட்
பாலய்யாவின் பகவந்த் கேசரி-ஐ 5 முறை பார்த்த விஜய்.. அப்போ தளபதி 69 அதுதானா? உண்மையை உடைத்த VTV கணேஷ்!

அடுத்த படம் சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கம் படம். வெற்றிமாறனின் இயக்குநர் குழுவில் முக்கிய உறுப்பினர் மற்றும் ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் செல்ஃபி படத்தின் இயக்குநர் தான் மதிமாறன் புகழேந்தி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com