புதுமையான முறையில் வெளியிடப்பட்ட பார்த்திபனின் 'டீன்ஸ்' பட ட்ரெய்லர் & இசை ! புதிய உலக சாதனை!

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு செய்யப்பட்டது.
பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்
பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்PT

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின், குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்
தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு இரு கண்கள் - கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

புதுமையான முறையில் வெளியிடப்பட்ட டிரெய்லர்!

ட்ரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

teenz
teenz

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.

teenz
teenz

விரைவில் வெளியாகவுள்ள 'டீன்ஸ்' திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார். இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்
50 கோடியில் வீடா? மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள்! பொய்செய்தி பற்றி நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்!

'டீன்ஸ்' இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள்!

விழாவில் பாராட்டு பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது, “எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. 'டீன்ஸ்' திரைப்படம் பற்றி கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள். பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரையும் போன்று நானும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்" என்று கூறினார்.

teenz
teenz

'டீன்ஸ்' தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் பேசியதாவது..

"நான் ஒரு குழந்தைகள் மருத்துவர். குழந்தைகளை மையப்படுத்திய 'டீன்ஸ்' திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொல்லும் போதே நான்கு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் பார்த்திபனே ஒரு டீன் ஏஜர் தான். இத்திரைப்படத்தில் 13 டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியதால் அவர் இன்னும் இளமையாக, அவர்கள் அனைவரின் உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார். இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை இத்திரைப்படத்திற்கு தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய இத்திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன்" என்றார்.

parthiban
parthiban

கவிஞர் மதன் கார்கி பேசியதாவது...

"தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பாக 'டீன்ஸ்' திரைப்படம் இருக்கும். பார்த்திபன் சார் இந்த கதையை என்னிடம் விவரிக்கும் போதே அவ்வளவு புதுமையாக இருந்தது. அதை திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக இமான் இசையமைத்துள்ளார். ஒரு புது இசையமைப்பாளரின் படைப்புகள் போல பாடல்கள் அவ்வளவு பிரஷ்ஷாக உள்ளன. படத்தில் பணியாற்றிய இளம் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்." என்றார்.

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்
MI விட்டு வெளியேறும் எண்ணத்தில் ரோகித்; Hardik-க்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை! தொடரும் பிரச்னை

பாராட்டிய நடிகர்கள், இயக்குநர்கள்!

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது...

"புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார். கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு இதில் பங்காற்றிய ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்த காத்திருக்கிறேன், நன்றி." என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது...

"பார்த்திபன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் இயக்குநர். நான் ஒரு டீனேஜராக இருந்தபோது அவரது 'புதிய பாதை' திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். இப்போது அவரது 'டீன்ஸ்' திரைப்படத்தை நான் வெளியிடுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்த டீனேஜர்களுக்கு 40 வயதாகும் போது அன்றைய டீனேஜர்கள் குறித்தும் பார்த்திபன் ஒரு படம் இயக்குவார் என்பது நிச்சயம். அந்த அளவுக்கு தன்னை அவர் இளமையாகவே வைத்துக் கொண்டுள்ளார். ஒரு திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கும்போது அதை எவ்வாறு புரொமோஷன் செய்ய வேண்டும் என்று நான் யோசித்து திட்டமிடுவது வாடிக்கை. ஆனால் பார்த்திபன் சார் திரைப்படத்திற்கு அவ்வாறு எதுவும் செய்ய தேவை இல்லை. எங்களை விட சிறப்பாக அவரே அனைத்து விதமான புரொமோஷன்களையும் செய்து கொண்டிருக்கிறார். இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும்." என்றார்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

நடிகர் யோகி பாபு பேசியதாவது...

"பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக 'டீன்ஸ்' படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன்" என்றார்.

இயக்குநர் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது...

"நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் 'டீன்ஸ்' படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த 'டீன்ஸ்' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி." என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ்
இயக்குநர் கே.பாக்யராஜ் PT WEB

இசையமைப்பாளர் D. இமான் பேசியதாவது...

"இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், நன்றி." என்றார்.

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம்
"அந்த 2 வீரர்களுடன் நான் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!" - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com