Pushpa 2, Identity, Tharunam, Bioscope உட்பட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகின்றன. அந்த பட்டியலை இங்கே காணலாம்...
Dan Fogelman உருவாகியுள்ள சீரிஸ் `Paradise'. பாதுகாப்பு வழங்கும் குழு ஒன்று சந்திக்கும் சவால்களே கதை.
Jeff Trammell உருவாக்கியுள்ள அனிமேஷன் சீரிஸ் `Your Friendly Neighborhood Spider-Man'. ஸ்பைடர்மேனகா மாறிய பீட்டர் பார்க்கரின் ஆரம்ப காலத்தை பற்றியதே கதை.
ஆதித்யா இயக்கியுள்ள சீரிஸ் ` The Secret Of The Shiledars'. சத்ரபதி சிவாஜிக்கு சொந்தமான புதையல் ஒன்றை பற்றிய தகவல் கிடைக்க, அதை மீட்கும் பொறுப்பு ராஜீவுக்கு வழங்கப்பட, அதன் பின் என்ன என்பதே கதை.
ஷரத் குமார் இயக்கியுள்ள படம் `Neela Mudi'. சாதிய அடக்குமுறைகள் பற்றி கூறும் படம்.
ரக்ஷா வீரன் இயக்கியுள்ள படம் `Pothugadda'. ஒரு பேருந்து பயணம் ஆபத்தாக முடிய, அதன் பின் நடப்பவையே கதை.
Nicholas Stoller இயக்கியுள்ள படம் `You’re Cordially Invited'. ஒரு திருமண மண்டபத்தில் தவறுதலாக, இரு திருமணங்களுக்கு முன்பதிவாகிவிட, அந்த இரு திருமணங்கள் நடப்பதில் ஏற்படும் கல்யாண கலாட்டாக்களே கதை.
பட் நாயக் இயக்கியுள்ள படம் `Coffee with a Killer'. காஃபி ஷாப் ஒன்றில் நடக்கும் கொலை, அதன் பின் நடப்பவை என்ன என்பதே கதை.
சித்தார்த் சிங் இயக்கியுள்ள படம் `Saale Aashiq'. ஒரு காதல் ஜோடி அரசியல் காரணங்களால் என்ன பாதிப்படைகிறார்கள் என்பதே கதை.
JT Mollner இயக்கிய படம் `Strange Darling'. ஒன் நைட் ஸ்டான்ட் ரிலேஷன்ஷிப் ஆக துவங்குகிறது லேடி - டீமின் உறவு. ஆனால் ஊருக்குள் சைக்கோ கொலைகாரர் ஊருக்குள் உலவும் செய்தி வருகிறது. அதன் பின் நடக்கும் நிகழ்வுகளே கதை.
ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் பரேஷ் ராவல் நடித்துள்ள படம் `The Storyteller'. சத்யஜித் ரே எழுதிய `Golpo Boliye Tarini Khuro' என்ற சிறுகதையின் திரைப்பட வடிவமே இது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த படம் `புஷ்பா 2’. 2021ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்சியாக, புஷ்பா - பன்வர் சிங் சிக்காவத் இடையே நடக்கும் மோதல்களும், புஷ்பாவின் வளர்ச்சியுமே கதை.
சங்கரி ராஜ்குமார் இயக்கிய படம் `பயாஸ்கோப்'. கிராமத்தினர் சிலர் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்கும் முயற்சியால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதே கதை.
அகில் பால் - அனஸ் கான் இயக்கத்தில் த்ரிஷா, டொவினோ தாமஸ், வினய் ராய் நடித்த படம் `Identity'. ஒரு ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட், காவல் துறை இணைந்து ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளே கதை.
Call Me by Your Name, Bones and All, Challengers படங்களுக்கு பிறகு Luca Guadagnino இயக்கியுள்ள படம் `Queer'. 50களில் மெக்சிகோவில் நிகழும் கதை. 40 வயதை தாண்டிய நபருக்கும், அந்த பகுதிக்கு புதிதாக வரும் மாணவருக்கும் இடையேயான உறவு பற்றி கூறும் கதை.
ஜோதிஷ் ஷங்கர் இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்துள்ள படம் `Ponman '. ஜி ஆர் கோபன் எழுதிய Nalanchu Cheruppakar என்ற கதையை தழுவிய படமாக உருவாகியிருக்கிறது படம்.
அர்ஜுன் - மீரா இருவரும் காதல் கொள்கிறார்கள். ஆனால் எதிர்பாராமல் வரும் ஒரு சிக்கல், அதன் பின் நடக்கும் திருப்பங்கள் கதை.
சக்திவேல் இயக்கியுள்ள படம் `ரிங் ரிங்'. காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது.
நரேஷ் இயக்கத்தில் ஆரவ் நடித்துள்ள படம் `ராஜபீமா'. யானையை மையப்படுத்திய ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
மோகனன் இயக்கத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள படம் `Oru Jaathi Jathakam'. ஜெயேஷ் என்ற இளைஞனின் வாழ்க்கை நிகழ்வுகளே கதை.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ள படம் `Deva'. மலையாளத்தில் வெளியான Mumbai Police படத்தின் இந்தி ரீமேக் இது என சொல்லப்படுகிறது.
Drew Hancock இயக்கியுள்ள படம் `Companion'. ஒரு பணக்காரரின் மரணம், ஐரிஷ் மற்றும் அவளது நண்பர்களை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.