குடும்பஸ்தன் குழுவுடன் பா.ரஞ்சித்எக்ஸ் தளம்
கோலிவுட் செய்திகள்
“தம்பி மணிகண்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்”- ‘குடும்பஸ்தன்’ குழுவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து
குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், “தம்பி மணிகண்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திரையரங்குகளில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த படம், ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படம்” என பதிவிட்டுள்ளார்.
குடும்பஸ்தன் படக்குழுவுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில், நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் மணிகண்டன் நாயகனாகவும், ஆர். சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், சான்வி மேக்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.