Nivin Paulys next ten movie releases
Nivin Paulyஎக்ஸ் தளம்

LCU முதல் சூப்பர் ஹீரோ வரை.. நிவின் பாலியின் அடுத்த 10 படங்கள் ரிலீஸ்! | HBD Nivin Pauly

நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையாக அமைந்துள்ளது.
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின் பாலியின் பிறந்தநாள் இன்று. 2023ல் வெளியான `Ramachandra Boss & Co' படத்திற்கு பிறகு அவர் நடித்த முழு நீளப்படம் எதுவும் வெளியாகாததால், அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களை மகிழ்ச்சியாக்கும் விதமாக அடுத்து அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகவுள்ளன. முதலில், வெளியாகவுள்ள படம் `பேபி கேர்ள்' (Baby Girl). பாபி - சஞ்சய் கதையில், அருண் வர்மா இயக்கியுள்ள இப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சங்கீத் பிரதாப், லிஜோ மோல் ஜோஷ் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளர். இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.

2025 கிறிஸ்துமஸில் ரிலீஸாக வர இருக்கிறது `சர்வம் மாயா' (Sarvam Maya). ஃபகத் பாசில் நடிப்பில் `பாச்சுவும் அத்புத விளக்கும்' படத்தை இயக்கிய அகில் சத்யன் இப்படத்தை இயக்கியுள்ளார். அஜு வர்கீஸ், வினீத், அல்தாஃப் அஸ்லம் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இது, ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ளது.

Nivin Paulys next ten movie releases
Nivin, Aju எக்ஸ் தளம்

`பிரேமலு' படம் மூலம் கவனம் ஈர்த்த கிரிஷ் ஏ.டி.இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் `பெத்லகேம் குடும்ப யூனிட்' (Bethlehem Kudumba Unit). ரொமான்டிக் காமெடியாக உருவாகும் இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். தாமர் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் `டால்பி தினேஷன்' (Dolby Dineshan) என்ற படமும் உருவாகி இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநராக நிவின் நடித்துள்ள இப்படம், வித்தியாமான காமெடி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இயக்குநர் B.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில், கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ஒரு அதிரடி பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படமும் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வருகிறது.

Nivin Paulys next ten movie releases
‘மாமழை போற்றுதும்’ இயற்கையை நேசிக்கும் நபராக நிவின் பாலி.. மிரட்டும் ”ஏழு மலை ஏழு கடல்” ட்ரெய்லர்!

அதேசமயம், தமிழ்த் திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. இயக்குநர் ராம் இயக்கியுள்ள `ஏழு கடல் ஏழு மலை' திரைவிழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ்த் திரையுலகில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸிலும் இருக்கிறார் நிவின் பாலி. லோகேஷ் கதை எழுத, பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் `பென்ஸ்' (Benz) படத்தில் வலுவான வில்லன் வால்டர் பாத்திரத்தில் நடிக்கிறார் நிவின்.

திரை உலகைத் தாண்டி, நிவின் பாலி வெப் சீரிஸ் களத்திலும் காலடி பதிக்கிறார். P.R.அருண் இயக்கத்தில் `Pharma' என்ற மலையாள வெப் சீரிஸில்  நடித்துள்ளார் நிவின். இது மெடிக்கல் எக்ஸிக்யூட்டிவ் உலகின் பின்னணியில் ஒரு தீவிரமான அதிரடி திரில்லர் டிராமா தொடராக உருவாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் தனது தயாரிப்பு நிறுவனமான Pauly Jr. Pictures மூலமாகவும் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். இதில் முதலாவதாக ஜார்ஜ் - சந்தீப் இயக்கத்தில் நிவின், நயன்தாரா நடிக்கும் `டியர் ஸ்டூடெண்ட்ஸ்' (Dear Students) படம் உருவாகியுள்ளது. மேலும் நிவின் பாலி சூப்பர் ஹீரோவாக நடிக்கும் `மல்டிவெர்ஸ் மன்மதன்' (Multiverse Manmadhan) படமும் தயாரிப்பில் உள்ளது.

Nivin Paulys next ten movie releases
அஜித் படத்தில் நடிக்கவில்லை: நிவின் பாலி விளக்கம்

இது மட்டுமில்லாமல் தனது தயாரிப்பு நிறுவனமான Pauly Jr. Pictures மூலமாகவும் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். இதில் முதலாவதாக ஜார்ஜ் - சந்தீப் இயக்கத்தில் நிவின், நயன்தாரா நடிக்கும் `டியர் ஸ்டூடெண்ட்ஸ்' (Dear Students) படம் உருவாகியுள்ளது. மேலும் நிவின் பாலி சூப்பர் ஹீரோவாக நடிக்கும் `மல்டிவெர்ஸ் மன்மதன்' (Multiverse Manmadhan) படமும் தயாரிப்பில் உள்ளது.

Nivin Paulys next ten movie releases
Nivin Paulyx page

வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்ததோடு, புதிய சவால்களையும் தைரியமாக ஏற்று வருகிறார். அவரது ரசிகர்களுக்கு, இந்த பிறந்தநாள் ஒரு புதிய சினிமா திருவிழாவின் தொடக்கமாக அமைந்துள்ளது.

நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையாக அமைந்துள்ளது.

Nivin Paulys next ten movie releases
மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நிவின் பாலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com