மாரிமுத்துவை காப்பியடித்து புது சீரியல்...இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல?

சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் கேரக்டரை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக விஜய் டீவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் -2ல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
Pandian stores
Pandian storesfile image

சமீபத்திய நாட்களில் சீரியல்களில் அதிகம் பேசப்பட்டது என்றால் அது எதிர்நீச்சல்தான். இதற்கு முக்கிய காரணம் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எனலாம். காரணம், ஒற்றை ஆளாக தனது வில்லத்தனத்தால், எதிர்நீச்சல் சீரியலை பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க வைத்தார் மாரிமுத்து. புயல் அடித்து ஓய்ந்ததுபோல, புகழ் உச்சியில் இருந்த அவர் திடீரென மாரடைப்பால் காலமான நிலையில், ரசிகர்களுக்கு அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Pandian stores
2 பாகங்களாக வரப்போகிறது இந்தியன் 2? வில்லன் இவர்தானா? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!

குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள் கூட இப்போது செலிபிரட்டி என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி இருந்து வரும் நிலையில், கடந்த வாரத்தோடு முடிந்த விஜய் டீவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு அடுத்தப்படியாக சீசன் 2 இந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கதாப்பாத்திரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை அடிநாதமாக வைத்து கதை நகரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த சீசன் ஆனந்தம் படத்தையும், நடப்பு சீசன் எம்மகன் படத்தையும் காப்பியடித்து ஓட்டப்படுவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்துள்ள நடிகர் அஜய் ரத்தினம் இந்த சீரியலில் நிரோஷாவின் அண்ணன் பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிலும், எதிர்நீச்சல் ஆதி குணசேகரனைப்போன்று வெள்ளை வேஷ்டி சட்டையில், நெற்றியில் மஞ்சள் மற்றும் திருநீரோடு வலம் வருகிறார். சில காட்சிகளில் மஞ்சள் மட்டும் வைத்தபடியும் வருகிறார். எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து, எப்போதும் திருநீரு மற்றும் குங்கும பொட்டோடு வருவார்.

இப்போது அவரை காப்பியடித்து நடித்து வருகிறீர்களா என்று நெட்டிசன்கள் சிலர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் -2 ஐ கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக மாரிமுத்துவுக்கு நிகர், மாரிமுத்துதான் என்றும் சிலர் சிலாகித்து வருகின்றனர்.

Pandian stores
ஆரம்பித்து வைத்த சரத்குமார்.. முடித்து வைத்த விஜய்...! சூப்பர் ஸ்டார் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com