”கன்னத்தில் தழும்புகள் இருந்துச்சு; 14 முறை என்னை அறைந்தார் நாகர்ஜுனா!” விஜய் பட நடிகை பகீர் தகவல்!
தமிழ் சினிமாவில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இஷா கோப்பிகர். தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், பின்னர் பாலிவுட்டிற்கு சென்று தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இஷா கோப்பிகர் நடித்திருந்தார்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துவரும் இஷா கோபிகர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெலுங்கில் தன்னுடைய இரண்டாவது படமான சந்திரலேகா படப்பிடிப்பின் போது நாகர்ஜுனா 14 முறை அறைந்ததாக கூறியுள்ளார்.
14 முறை கன்னத்தில் அறைந்த நாகர்ஜுனா..
சமீபத்தில் ஹிந்தி ரஷ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சினிமாவின் ஆரம்பத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை இஷா கோப்பிகர். சந்திரலேகா படத்தில் நடித்தபோது தனக்கு கோவப்படுவதற்கான எமோசன் வரவில்லை என நாகர்ஜுனாவை அறைய சொன்னதை நினைவுகூர்ந்தார்.
பேட்டியில் பேசியிருக்கும் அவர், “நாகர்ஜுனாவால் நான் 14 முறை அறையப்பட்டேன். முடிவில் என்னுடைய கன்னத்தில் தடித்த தழும்புகள் இருந்தன. சினிமாவில் என்னுடைய ஆரம்பகாலம் என்பதால், நான் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிக்க ஆசைப்பட்டேன். அதனால் கோபக்கூடிய ஒரு காட்சியில் இயக்குநருக்கு அவர் நினைத்தது கிடைக்கவில்லை என்பதால், உண்மையான எமோசன் வரவேண்டும் என்பதற்காக நான் நாகர்ஜுனாவை உண்மையாகவே அறையச் சொன்னேன்.
அவர் முதலில் உண்மையாகவா சொல்கிறாய்? நான் அறைய மாட்டேன் என்று மறுத்தார். எனக்கு அந்த உணர்வு வரவேண்டும், தற்போது எனக்கு அந்த உணர்வு வரவில்லை, அதனால் அறையுங்கள் என்று கூறினேன். அதற்குபிறகு அவர் அறைந்தார், ஆனால் அந்த காட்சி 14 முறை டேக் எடுத்தது, முடிவில் என் கன்னத்தில் அறையப்பட்ட தழும்புகள் இருந்தது. அதைப்பார்த்த நாகர்ஜுனா என்னிடம் மன்னிப்பு கேட்டார். நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய் என்று கூறினேன்” என பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.