ரஜினிகாந்த், அஜித், வடிவேலு - இவ்வங்களோட அடுத்த பட அப்டேட் என்ன?

நடிகர் ரஜினி, அஜித், வடிவேலு ஆகியோரின் அடுத்த பட அப்டேட்கள் என்ன? என்பதை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
ரஜினிகாந்த், வடிவேலு, அஜித்
ரஜினிகாந்த், வடிவேலு, அஜித்puthiya thalaimurai

நடிகர் ரஜினி ?

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாக இருக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையில் காவாலா பாடல் ஹிட் ஆக, வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், இதற்காக அவர் திரைக்கதை எழுதி வரும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், வடிவேலு, அஜித்
ராமர் கோவில் திறப்பு விழா: “அரசியலைப்பு முன்னுரையை” பதிவிட்ட மலையாள திரை நட்சத்திரங்கள்! பற்றிய அலை!

ஏற்கனவே அவர் ரஜினிகாந்துடன், சந்திரமுகி, குசேலன், சிவாஜி படத்தில் பல்லேலக்கா பாடல், தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் மூலம் நயன்தாரா ஆறாவது முறையாக ரஜினியுடன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது, வேட்டையன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்?

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், சலார் ஆகிய படங்கள் பிரம்மாண்டமாக உருவானதுடன் மிகப்பெரிய வசூலையும் பெற்றன. சலார் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த், வடிவேலு, அஜித்
EXCLUSIVE | கேப்டன் மில்லர் படம் ‘பட்டத்து யானை’ நாவலிலிருந்து திருடப்பட்டதா? வேல ராமமூர்த்தி பதில்!

இந்நிலையில், பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் படத்திற்குப் பின்பே அஜித்துடன் பிரசாந்த் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலார் மற்றும் துணிவு படத்தால் இருவரும் பிஸியாகினர். தற்போது அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவாரா? அல்லது பிரசாந்த் நீல் இயக்குவாரா என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் வடிவேலு?

நடிகர்கள் ஃபகத் ஃபாசில், வடிவேலு இணையும் திரைப்படத்திற்கு மாரீசன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் உதயநிதி, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த், வடிவேலு, அஜித்
“கடைநிலை நடிகர்களுக்கு விஜயகாந்த் ஒரு கடவுள்!”- நினைவேந்தல் கூட்டத்தில் சக நடிகர்கள் புகழஞ்சலி!

குறிப்பாக, அந்த படத்தில் நடித்த வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரமும், ஃபகத் ஃபாசிலின் ரத்னவேல் கதாபாத்திரமும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், வடிவேலு, ஃபகத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.

சாலை பயணத்தை மையமாக வைத்து நகைச்சுவை பாணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு, மாரீசன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் 98 ஆவது திரைப்படமாக இது உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com