\
Tom Holland, Zendaya
Tom Holland, ZendayaSpider-Man: Brand New Day Review

அதிரடி கம்மி, எமோஷன் ஜாஸ்தி... எப்படி இருக்கு ஸ்பைடர்மேன்? | Spider-Man: Brand New Day Review

பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
Published on
அதிரடி கம்மி, எமோஷன் ஜாஸ்தி... எப்படி இருக்கு ஸ்பைடர்மேன்?(3 / 5)

பீட்டர் பார்க்கராக மறக்கப்பட்டு, ஸ்பைடர்மேன் ஆக மட்டும் பயணிக்கும் சூப்பர் ஹீரோவின் கதை!

Spider-Man: No Way Home பட முடிவில் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் போட்ட மந்திரத்தால், மொத்த உலகமும் பீட்டர் பார்க்கர் என்ற ஒருவர் இருப்பதையே மறந்து போகிறது. இந்த சம்பவத்துக்கு நான்கு ஆண்டுகள் கழித்து துவங்குகிறது Spider-Man: Brand New Day. எந்த அடையாளமும் இல்லாமல் ஸ்பைடர்மேனாக மட்டும் நியூயார்க் நகரத்து குற்றங்களை தடுத்துக் கொண்டும், தன்னை மறந்து போனாலும் MJ மற்றும் நெட் இருவரையும் தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டும் இருக்கிறார் பீட்டர் பார்க்கர். அப்போது நகரத்துக்குள் உள்ள மனிதர்களின் உடலை ஆட்கொள்ளும் Jean Greyயின் புதுவிதமான தாக்குதலை கவனிக்கிறார். அதனை செய்யும் Jean Greyயின் நோக்கம் Department of Damage Control-ல் V Max என்பதை அடைவது தான் நோக்கம் என அறிந்து கொள்கிறார் ஸ்பைடர்மேன். இதேவேளையில் பீட்டரின் உடலிலும் ஸ்பைடர்மேனுக்கு சில மாறுதல்கள் ஏற்பட துவங்குகிறது. யார் இந்த Jean Grey? V Max என்பது என்ன? ஸ்பைடர்மேனுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? இவற்றை எல்லாம் சொல்கிறது மீதிக்கதை.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Day
Tom Holland, Zendaya
எப்படி இருக்கு தளபதி கச்சேரி? | Jana Nayagan Review | Vijay | H Vinoth

பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள் எழுத்தாளர்களான Chris McKenna, Erik Sommers மற்றும் இயக்குநர் Destin Daniel Cretton. ஸ்பைடர்மேன் கதையை எல்லா கோட்டையும் அழித்துவிட்டு முதலில் இருந்து சொல்வதை போல, இது ஒரு புதிய துவக்கமாக அமைந்திருக்கிறது. படத்தின் பெரிய ப்ளஸ், இந்தக் கதையை சொல்ல ஓரு எதிரி, அவருக்கான பின் கதை, அதனுடன் ஸ்பைடர்மேனை இணைத்தது மேலும் அதற்குள் ஒரு வலுவான எமோஷனை கலந்து சொன்ன விதம். தன் வாழ்க்கையை யாருமில்லாமல் கடத்த முடிவு செய்யும் பீட்டர் பார்க்கர் ஒரு பக்கம், தன்னுடைய இழப்புக்கு பழிவாங்க கிளம்பும் நபர் ஒரு பக்கம் என படத்தின் முரணே மிக சிறப்பாக இருந்தது.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Day
Tom Holland, Zendaya
10 வயது ரசிகைக்கு சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்! | Simran | Nisha

பீட்டர் பார்க்கராக Tom Holland இந்த முறை மிக வலுவான நடிப்பை வழங்கி இருக்கிறார். நண்பர்களை வீடியோ வாயிலாக மட்டும் கவனிப்பது. எதேர்சையாக சந்திக்கும் போது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவது போன்ற இடங்களில் அசத்துகிறார். MJவாக Zendaya மிக அழுத்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஒரு லெட்டர் படிக்கும் காட்சி, அதனை தொடர்ந்து வரும் காட்சி என அவர் நடிப்பு வசீகரிக்கிறது. Jean Greyயாக வரும் Sadie Sink மிக இயல்பாக ஒரு மிரட்டலான நடிப்பை வழங்குகிறார். Ned Leeds ஆக Jacob Batalon, Frank Castleஆக Jon Bernthal, சிறப்பு தோற்றத்தில் Michael Mando, Mark Ruffalo, Florence Pugh என அத்தனை பெரும் கட்சித்தம். இந்தக் கதைக்குள் Punisher, Hulk போன்றோரை வெறும் பேருக்கு கொண்டு வராமல் முறையாக பயன்படுத்தி இருந்த விதமும் பாராட்டுக்குரியது.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Day
Tom Holland, Zendaya
எப்படி இருக்கு நோலனின் இதிகாச சினிமா? | The Odyssey Review | Christopher Nolan

இந்தப் படத்தில் எமோஷனை மையமாக வைத்து அதிரடியை கம்மி ஆக்கி இருந்தாலும் விஷுவலாக ஒவ்வொரு காட்சியையும் மிக சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் Brett Pawlak. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி எல்லாம் அதகளம். Michael Giacchino பின்னணி இசையும் வெகு சிறப்பு.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Day

நேசத்துக்கு உரியவர்களை பிரிந்திருப்பது குறித்து படத்தின் முக்கிய பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்கள் இருக்கிறது. அதிலும் மே பார்க்கர் பாத்திரத்தை வைத்து படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சி மிகவும் சிறப்பாக உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. படத்தின் ஹைலைட் என்றே அதனை சொல்லலாம். Spider-Man Home Trilogy போல பரபர கதைக்களத்தை எதிர்பார்த்தால் சற்று ஏமாற்றம் ஏற்படலாம். ஆனால் உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்துக்கு தயாராக இருந்தால் நிச்சயம் ஒரு திருப்தியான ஸ்பைடர்மேன் படமாக இருக்கும். அதே சமயம் வில்லன் யார் என்பது எளிதில் யூகிக்க முடிவது ஒரு மைனஸ். மேலும் அந்த பாத்திரத்தின் செயல்களுக்கான நியாயமும் சரிவர சொல்லப்படவில்லை என்பதும் ஒரு குறை.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Day
Tom Holland, Zendaya
ஜாலியான காமெடி படமாக கவர்ந்ததா ’அன்பே டயானா’? | Anbe Diana Review | Pari Elavazhagan

மொத்தத்தில் நிச்சயமாக விஷுவல் மற்றும் எமோஷனல் ட்ரீட்டாக உங்களை ரசிக்க வைக்கும் இந்த Spider-Man: Brand New Day. இந்தப் படத்தில் Mid Credit எதுவும் கிடையாது, ரோலிங் டைட்டில் முடியும் வரை காத்திருந்தால் ஒரு End Credit வரும். காத்திருந்து பாருங்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com