LIK Movie Review, Pradeep Ranganathan
Pradeep RanganathanLIK Movie Review

அன்பா.? or APP-ஆ..? எப்படி இருக்கிறது LIK? நான்காவது முறையும் ஹிட் அடித்தாரா பிரதீப்? | LIK Review

விக்னேஷ் சிவன் ஒரு வழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் வழங்கி இருக்கிறார். அதில் எண்டர்டெய்ன்மெண்ட்க்கு எந்தக் குறையும் இல்லை என்பது தான் விஷயமே.
Published on
அன்பு vs APP... நான்காவது முறையும் ஹிட் அடித்தாரா பிரதீப்?(3.5 / 5)

காதலுக்கும் டெக்னாலாஜிக்கும் இடையேயான மோதலே இந்த LIK

தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறிய 2040ல் Love Insurance Kompany என்ற நிறுவனத்தின் மூலம் மிகப் பிரபலமாக இருக்கிறார் சூரியன் (எஸ் ஜே சூர்யா). நட்போ, காதலோ திருமணமோ எல்லாமே LIK சொன்னபடி தான் நடக்க வேண்டும் என மனித உணர்வுகளை எல்லாம் பிடுங்கி மிஷின் மயமாகவும், டேட்டா மயமாகவும் நகரத்தை இயக்குகிறார். இதே கூட்டத்தில் சில்வர் ஸ்டேட்டஸில் இருக்கும் LIK அக்கவுண்ட்டை கோல்ட் ஸ்டேட்டஸுக்கு மாற்ற போராடுகிறார் தீமா (க்ரித்தி ஷெட்டி). இன்னொரு பக்கம் ஆர்கானிக் உலகத்தில் தொழில்நுட்ப வஸ்துக்கள் எதுவும் தீண்டாமல் வளர்கிறார் வைப் வாஸே என்ற வைபவ் வாசுதேவன் (பிரதீப் ரங்கநாதன்). எதேர்ச்சையாக தீமாவை பார்க்கும் வாசுவுக்கு கண்டதும் காதல். பேசி பழகி காதல் வரை சென்றாலும் தீமா - வாசுவுக்கு குறுக்கே ஆப் வடிவில் வருகிறார் சூரியன். ஆப் மூலம் வரும் காதலே பெரிது என தீமா வாதாட, இதயத்திலிருந்து வரும் காதலே பெரியது என வாசு போராட, இந்த மோதல் ஒரு பக்கம். LIK தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது என அரசாங்கம், ஆப்பை தடைசெய்யும் வழக்கை மேற்கொள்ளுகிறது. அன்பின் மூலம் பிறக்கும் காதலை விட, ஆப் மூலம் பிறக்கும் காதலே சிறந்தது என நிரூபிக்க தீமா - வாசுவை பிடிப்பது தான் ஒரே வழி என தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் சூரியன். இதன் பிறகு தீமா - வாசு இணைந்தார்களா? சூரியன் ஜெயித்தாரா? என்பதை சொல்கிறது மீதிக்கதை.

LIK
LIK
LIK Movie Review, Pradeep Ranganathan
இணையத்தில் பரவிய `ஜனநாயகன்'.. இது குறித்து பேசுவாரா விஜய்? | Jana Nayagan Leak | Vijay

விக்னேஷ் சிவன் ஒரு வழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் வழங்கி இருக்கிறார். அதில் எண்டர்டெய்ன்மெண்ட்க்கு எந்தக் குறையும் இல்லை என்பது தான் விஷயமே.

பிரதீப் ரங்கநாதன் ஒரு பிரமாதமான எண்டர்டெய்னர் என்பதை படத்துக்கு படம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அந்த அளவு அவரின் நடிப்பு காமெடி, எமோஷன், ரொமான்ஸ், சண்டை, நடனம் என அனைத்திலும் வெளிப்படுகிறது. அவருக்கு சற்றும் குறைவில்லாமல் எனர்ஜி ஏற்றுகிறார் எஸ் ஜே சூர்யா. வில்லத்தனம் + காமெடி கலவை மிஸ் ஆகாமல் எல்லா காட்சிகளிலும் வருகிறார். அவரின் மயிலிறகே டான்ஸ் வந்ததும் எல்லாம் தியேட்டரே தெறிக்கிறது. ஹீரோயினாக வரும் க்ரித்தி ஷெட்டிக்கு இன்றைய இன்ஸ்ட்டா இன்ஃபுளுயன்சர்களை பிரதிபலிக்கும் வேடம். அதனை மிக கட்சிதமாக செய்கிறார். பிரதீப் உடனான காதல் + மோதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பை கொடுக்கிறார். சின்ன ரோல் என்றாலும் Open Friend ஆக வரும் யோகி பாபுவின் காமெடி அத்தனையும் சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. கௌரி கிஷன், ஷாரா, சீமான், ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களில் சிறப்பு.

LIK
LIK
LIK Movie Review, Pradeep Ranganathan
விஜய் கிடைக்காததால் அஜித் ரசிகர்களுக்கு குறி..? அதிமுகவின் வியூகம் என்ன..?

உணர்வுகள் மூலம் பிறக்கும் காதல் vs மெஷின்களின் டேட்டாக்கள் மூலம் பொருத்தம் பார்த்து உருவாகும் காதலுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை பேச முயன்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதை தான் சொல்ல வந்த விஷயத்தையும் தெளிவாக சொல்லி, படத்தையும் எங்கும் அலுப்பு ஏற்படாத வகையில் திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். எத்தனை தொழிநுட்பம் வந்தாலும், எவ்வளவு முன்னேறினாலும் மனிதத்தை தழைக்க செய்யும் ஒரே விஷயம் அன்பு தான். அதனை அட்சரசுத்தமாக சொல்கிறது படம்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத் இசை. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றால், திடீரென வரும் எனக்கென யாருமில்லையே பாடல் ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப். பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அம்சமாக பொருந்துகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு எதிர்கால உலகத்தை காட்டுவதை தாண்டி, கதாபாத்திர உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. பிரதீப் ராகவின் படத்தொகுப்பு பரபரப்பை கடைசி வரை தக்க வைக்கிறது.

LIK
LIK
LIK Movie Review, Pradeep Ranganathan
இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம் | ‘உதயநிதி & எல்.முருகன் கூட்டு சதி’ - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால் காட்சிகள் அத்தனையும் சுவராஸ்யமாக இருக்கிறது என்றாலும், இன்னும் கொஞ்சம் சுருக்கமாக படத்தை கொடுத்திருக்கலாம். சொன்ன விஷயங்களையே திரும்ப திரும்ப சொல்லி கதை ஒரு இடத்தில் தேங்கிவிடும் உணர்வு வருகிறது. எஸ் ஜே சூர்யா பாத்திரத்திற்கு மனிதர்களின் காதல் மேல் ஏன் வெறுப்பு என்பதை இன்னும் உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கலாம்.

இது போல சில குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்த படமாக ஒரு ப்ளாஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் படமாக ஈர்க்கிறது இந்த LIK. தாராளமாக பார்த்து ரசித்து சிரிக்கலாம், சிந்திக்கலாம்.

LIK Movie Review, Pradeep Ranganathan
"திருட்டுப் பிரதிகளைத் தவிர்க்கவும்.." - ஜனநாயகனுக்காக குரல் கொடுத்த SK | Jana Nayagan | Vijay
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com