\
Sigma Review
Sigma ReviewJason Sanjay / Sigma Review

இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? எப்படி இருக்கு சிக்மா? | Sigma Review | Jason Sanjay

இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
Published on: 
இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? எப்படி இருக்கு சிக்மா?(2 / 5)

ஹீரோவின் ஹெய்ஸ்ட் ப்ளானும், அதன் விளைவுகளுமே `சிக்மா'

குரு (சந்தீப் கிஷன்) தன் அப்பா வாங்கிய கடனை அடைத்து, அம்மாவுடைய நினைவாக இருக்கும் நூலகத்தை மீட்க நினைக்கிறார். வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாயாக வளர்ந்து நிற்கும் தொகையை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தவிக்கும் அவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு பென் டிரைவ் கிடைக்கிறது. அந்த பென் டிரைவுக்குள் கிரைம் தொடர்பான முக்கியமான வீடியோ இருக்கிறது. அதை பார்த்த சந்தீப், அந்த வீடியோவை வைத்தே சம்பந்தப்பட்ட நபர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க திட்டம் போடுகிறார். இந்த சூழலில் அவரின் வாழ்க்கைக்குள் கேம்ப்ளிங் செய்யும் வின்சென்ட் (ஷிவ் பண்டிட்) மற்றும் கடத்தல் தொழிலில் ஈடுபடும் கொட்லபடி வீரய்யா ரெட்டி (சம்பத்) ஆகியோர் குறுக்கே வருகிறார்கள். சந்தீப் வைத்திருக்கும் பென் டிரைவ் இவர்களுடைய வாழ்க்கையில் எப்படி முக்கியமானதாகிறது? அவர்களை சந்தீப் எப்படி சமாளிக்கிறார்? சந்தீப்பின் திட்டம் என்ன ஆனது? என்பதுதான் மீதிக்கதை.

Sigma
Sigma
Sigma Review
ஆணாதிக்கம், பாலினப் பாகுபாடு.. ‘டோரதி’ பேசும் அரசியல் என்ன? | Dorothy Review | Karthik Subbaraj

இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள், கதாபாத்திரங்களின் அறிமுகம் மற்றும் படத்தின் ஒட்டுமொத்த டோன் என சில இடங்களில் அந்த முயற்சி தெரிகிறது. வெவ்வேறு பின்னணியில் பயணிக்கும் மூன்று கதைகளை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இணைக்கும் திரைக்கதை ஓரளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

லீட் ரோலில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன் படத்தின் பலம். ஆக்‌ஷன், காமெடி, மாஸ் மற்றும் எமோஷன் என தனக்கு கொடுக்கப்பட்ட விஷயங்களை அவரால் முடிந்த அளவுக்கு கச்சிதமாக செய்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது நடிப்பு படத்திற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. அன்புதாசனின் சில காமெடி காட்சிகள் படத்தின் சீரியஸான கதைக்களத்துக்கு நடுவில் ஓரளவுக்கு ரிலீஃப் கொடுக்கின்றன. குறிப்பாக அவரது டைமிங் சில இடங்களில் நன்றாக ஒர்க் ஆகியிருக்கிறது. தமனின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தேவையான மாஸ் உணர்வை கொடுக்கிறது. ஆனால், பாடல்களைப் பொறுத்தவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எதுவும் மனதில் நிற்கவில்லை.

Sigma Review
கானா கலைஞர்களின் உலகத்தை அழுத்தமாகப் பேசியதா ‘மீசைய முறுக்கு 2’? | Meesaiya Murukku 2 Review

‘சிக்மா’வின் மிகப்பெரிய பிரச்சனை அதன் எழுத்துதான். படத்தின் ஒன்லைன் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை முழுமையான திரைக்கதையாக மாற்றும்போது இன்னும் அழுத்தமான எழுத்து தேவைப்பட்டிருக்கிறது. ஹீரோவுக்கு ஒரு பெரிய பிரச்சனை கொடுக்கப்படுகிறது. அதை அவர் புத்திசாலித்தனமான திட்டம் போட்டு எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஹீரோவின் செயல்பாடுகள் அமையவில்லை. படம் முழுவதும் ஹீரோ ஏதாவது ஒரு சுவாரஸ்யமான திட்டம் போடுவார் என்று காத்திருக்கும்போது, கடைசி வரை அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் புத்திசாலித்தனமான மூவ் எதுவும் பெரிதாக வரவில்லை.

Sigma Review
சாமானியனின் சட்ட போராட்டம், சினிமாவாக ஈர்க்கிறதா? | Enna Vilai Review | Karunaas | Nimisha Sajayan
Sigma Review
ஆணவ கொலை அநீதி பேசும் பாரிஸ் கஃபே... எப்படி இருக்கிறது? | Paris Cafe Review

ஃபரியா அப்துல்லா உட்பட முக்கிய கதாபாத்திரங்கள் பலருக்கும் மிகவும் வழக்கமான கதாபாத்திர வடிவமைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வில்லன்களாக வரும் ஷிவ் பண்டிட் மற்றும் சம்பத் ஆகியோரின் கதாபாத்திரங்களிலும் இன்னும் புதுமையான தன்மை இருந்திருக்கலாம். அவர்களுடைய பின்னணி, நோக்கம் மற்றும் ஹீரோவுடன் உருவாகும் மோதல் ஆகியவை இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தால் கதைக்கு கூடுதல் வலு கிடைத்திருக்கும். படம் பல இடங்களில் ட்விஸ்ட் கொடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த திருப்பங்கள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு வலுவாக அமையவில்லை.

ஹீரோவின் பணத் தேவை, கையில் கிடைக்கும் பென் டிரைவ், அதை வைத்து பணம் சம்பாதிக்க போடும் திட்டம், அதற்குள் குறுக்கே வரும் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்கள் என படத்தின் அடிப்படை ஐடியா சுவாரஸ்யமானதுதான். ஆனால், இந்த ஐடியாவை இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையாகவும், விறுவிறுப்பான காட்சிகளாகவும் மாற்றியிருக்கலாம்.

மொத்தத்தில், ஸ்டைல் இருக்கிறது; ஆனால் அந்த ஸ்டைலுக்கு ஏற்ற விறுவிறுப்பும், திரைக்கதை பலமும் இருந்திருந்தால் மறக்க முடியாத படமாக மாறி இருக்கும் இந்த ‘சிக்மா’.

Sigma Review
நானியின் அதிரடி நடிப்பு, பிரம்மாண்ட ஆக்‌ஷன்.. ஆனால் தடுமாறும் பாரடைஸ் | The Paradise Review
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com