\
vijayakanth and mansoor alikhan
vijayakanth and mansoor alikhanfile image

உங்களுக்கு ஏன் இந்த நிலைமை..? தம்பி அழுகிறேன்.. நன்றாகி வாங்கண்ணே.. மன்சூர் அலிகான் உருக்கம்

உடல்நலக்குறைவு காரணமாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் உடல்நலம்தேறி வர வேண்டும் என்று கடவுளுக்கு வேண்டுகோள் வைப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published on

அதில், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே! நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது பில்டப் செய்தும், டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு உதை உதைப்பீர்களே அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து. ஓடி. ஆடி ... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு..

கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா .. தாங்களிடம் அடிவாங்க தம்பி காத்திருக்கிறேன்..” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பலரும் பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

vijayakanth and mansoor alikhan
மன்சூர் அலிகானை மன்னிப்பதா தண்டிப்பதா? போலீஸுக்கு நடிகை த்ரிஷா கொடுத்த பதில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com