விஜயின் `ஜனநாயகன்' பட ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டுவிட்டதா? | Jana Nayagan | Vijay | H Vinoth
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனை படக்குழு மாற்றம் செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. அதனை எதிர்த்து தணிக்கை வாரிய தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது. கடைசியாக படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. அதன்படி, ரிவைசிங் கமிட்டி மார்ச் 17ஆம் தேதி படத்தை மும்பையில் பார்த்தது. அதன்படி படத்திற்கு என்ன சான்றிதழ் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை.
இப்போது படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் உலவி வருகின்றன. விஜய் இப்போது ஓர் அரசியல் தலைவரும் ஆகிவிட்டார் என்பதால் அவருடைய திரைப்படத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்தச் சமயத்தில் வெளியிட முடியாது. எனவே படத்தை வெளியிட படக்குழு இரு தேதிகளை முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று தேர்தல் முடிந்த அடுத்த நாள். அதாவது ஏப்ரல் 24. இன்னொன்று ஏப்ரல் 30ஆம் தேதி. படத்தின் சான்றிதழ் குறித்த தகவலும் விரைவிலேயே வெளியாக உள்ளது எனச் சொல்கிறது சினிமா வட்டாராம்.

