இன்ஸ்டாவில் அனைவரையும் அன்ஃபாலோ செய்த ரிஷப் ஷெட்டி! | Rishab Shetty | Instagram
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக, இயக்குநராக புகழ்பெற்றவர் ரிஷப் ஷெட்டி. `காந்தாரா' படத்தை இயக்கி நடித்ததற்கு பிறகு இவர் உலக அளவில் பிரபலமானார். இப்போது இவர் இன்ஸ்டாகிராமில் செய்த நடவடிக்கைகள் பரபரப்பான பேசுபொருளாகி இருக்கிறது.
ரிஷப் ஷெட்டி கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்களை அன்ஃபாலோ செய்ததார். குறிப்பாக கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் ராஜ் பி ஷெட்டி மற்றும் நடிகை ருக்மிணி வசந்த் ஆகியோரை அன்ஃபாலோ செய்ததார் என்ற செய்தி பரபரப்பானது. அதற்கு முன்பு இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய காந்தாரா படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனத்தையும், தயாரிப்பாளரையும் அன் ஃபாலோ செய்தார். இதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்ட்டா கணக்கிலிருந்து பலரையும் அன் ஃபாலோ செய்துவிட்டார். இப்போது அவரது மனைவி பிரகதி, அவரது தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது Rishab Shetty Foundation ஆகிய மூன்று கணக்குகளை மட்டுமே ஃபாலோ செய்கிறார்.
அப்போதிருந்து, பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கியுள்ளன. அதே சமயம் தனது எக்ஸ் பக்கத்தில் ஹோம்பாலே, ராஜ் பி ஷெட்டி, ருக்மிணி வசந்த் ஆகியோரை எல்லாம் இன்னும் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். இன்ஸ்ட்டாவில் மட்டும் ஏன் இந்த மாற்றம் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. 'கந்தாரா' படத்திற்கு பிறகு பிரசாந்த் வர்மா இயக்கும் 'ஜெய் ஹனுமான்' திரைப்படத்தில் அனுமன் வேடத்திலும், 'தி பிரைட் ஆஃப் பாரத்' என்ற வரலாற்றுத் திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜராகவும் நடிக்கிறார்.

