கேரளா சென்ற லோகேஷ் கனகராஜ்.. ப்ளான் கேன்சல்.. இதுதான் காரணமா?

“கேரள ரசிகர்களின் அன்புக்கு நன்றி. பாலக்காட்டில் கிடைத்த இந்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்தேன். விரைவில் மீண்டும் வந்து உங்களை சந்திக்கிறேன். அதுவரை லியோ திரைப்படத்தை அதே அன்போடு கண்டு மகிழுங்கள்” - லோகேஷ் கனகராஜ்
lokesh kanagaraj
lokesh kanagaraj file image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகியுள்ளது. வெளியான 5 நாட்களில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கேரளாவில் விஜய்க்கு ரசிகர் படை அதிகம் என்றாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ரசிகர்களை சந்திப்பதற்காக கேரள மாநிலம் பாலக்காடு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அங்கிருந்த திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்து செல்ஃபி ஒன்றும் எடுத்துக்கொண்டார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்ததால் ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் சிக்கிய லோகேஷும் காயமடைந்துள்ளார். இதனால், அடுத்தடுத்த இருந்த 2 தியேட்டர் விசிட் கேன்சல் ஆனதோடு, செய்தியாளர்களை சந்திக்கும் திட்டமும் ரத்தாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட லோகேஷ், “கேரள ரசிகர்களின் அன்புக்கு நன்றி. பாலக்காட்டில் கிடைத்த இந்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்தேன். கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு காயத்தால், அடுத்தடுத்து திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை.

விரைவில் மீண்டும் வந்து உங்களை சந்திக்கிறேன். அதுவரை லியோ திரைப்படத்தை அதே அன்போடு கண்டு மகிழுங்கள்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

lokesh kanagaraj
அய்யய்யோ... லியோவின் இந்த பாடல் அனிருத் இசை இல்லையா? சம்பந்தப்பட்ட பாடகரே சொன்ன பதில்!

மாஸ்டர் பட ஷூட்டிங்கின்போது, விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள், நெய்வேலியில் விஜய்யை பார்க்க குவிந்தனர். அப்போது, பேருந்து மீது ஏறி ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி படு பயங்கரமாக வைரலானது.

அதைப்போல, கேரளா சென்ற லோகேஷும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வலம்வரத் தொடங்கியுள்ளது.

lokesh kanagaraj
வெளியானது தளபதி 68 பூஜை வீடியோ... குஷியில் ரசிகர்கள்..!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com