வெளியானது தளபதி 68 பூஜை வீடியோ... குஷியில் ரசிகர்கள்..!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 68“ படத்தின் பூஜை வீடியோவை பகிர்ந்துள்ளது படக்குழு.
தளபதி 68
தளபதி 68x வலைதளம்

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், முதல் 4 நாட்களிலேயே 400 கோடி வசூல் செய்துள்ளதென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பரபரப்பான ஓப்பனிங்கை பெற்ற லியோவிற்கு, திரையரங்குகளில் இன்றும் டிக்கெட் பதிவு ஹவுஸ்ஃபுல்லில்தான் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் அடுத்தபடமான தளபதி 68 படத்தின் பட பூஜை வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களை மேலும் குஷிபடுத்தியுள்ளது.

தளபதி 68
என்னது 145 கோடியா! முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்த லியோ.. வெளியாகும் தகவல்கள்
 தளபதியின் 68
தளபதியின் 68x வலைதளம்

இப்படத்தை வெங்கட்பிரபு இயக்க, யுவன் இசையமைப்பார் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜயதசமியான இன்று, இப்படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தளபதி 68-ல் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மோகன், அஜ்மல், யோகி பாபு, விடிவி கனேஷ், பிரேம்ஜி, வைபவ், மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இப்படம் சுவாரஸ்ய “அதிக சண்டை காட்சிகளை உள்ளடக்கிய படமாக "high-octane action film" இருக்கும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 68
தளபதி 68-ல் நடிகர் மோகன்!

கடந்த செப் 1-ம் தேதி முதற்கட்டமாக இப்படத்தை பற்றி தனது x வலைதளபக்கத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதில், ‘Welcome to the future’ என குறிப்பிட்டிருந்தார் அவர்.

அந்தப் பதிவில், “தளபதியின் 68-வது படத்திற்கான 3D ஸ்கேனிங் மற்றும் vfx பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் USC Institute for creative Technologies நிறுவனத்தில் நடைபெறவுள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார் அவர்.

தற்போது அடுத்தகட்டமாக தளபதி 68 பட பூஜை காணொளியானது இன்று 12.05 க்கு வெளியாகும் என்று படக்குழு தனது சமூக வலைதளமான x பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி இன்று வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளனர்.

லியோ வெற்றி ஒருபக்கம், தளபதி 68 அறிவிப்பு இன்னொரு பக்கம் என மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் விஜய் ஃபேன்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com