‘சும்மாவே அனல்பறக்கும்.. கூட இவரும் சேர்ந்தா’ - கமல்ஹாசனின் 237 படத்தின் அறிவிப்பு வெளியானது!

நடிகர் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதர்கள் இயக்குகின்றனர்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்pt web

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு இவரின் 234-வது படமான தக் லைஃப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு தொடர்பான வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலாகி இருந்தது.

கமல்ஹாசன்
குற்றப்பரம்பரை சட்டத்தின் கொடூரமான காலங்கள்..கமலின் ‘THUG LIFE’ அறிவிப்பும், வரலாற்றுப் பின்னணியும்

இதனைத் தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குநர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளிவரைவில்லை. பா.ரஞ்சித் தற்போது ‘தங்கலான்’ உருவாக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நெல்சன் ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கதைக்கான எழுத்துப்பணியில் ஈடுபட்டுள்ளதாக சில தினங்கள் முன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதர்கள் இயக்குகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் மெட்ராஸ், கேஜிஎஃப், கைதி, விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்திலும் தெரிவித்துள்ளார். அதில் அவர் “மாஸ்டர்ஸ் அன்பறிவின் புதிய அவதாரத்தில் அவர்களுடன் இணைவதில் பெருமை அடைகிறேன்” என தெரிவித்துள்ளார். இப்படம் 2025ல் வெளியாகவுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் அன்பறிவ் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com