Jeethu Joseph give Drishyam 3 release update
Jeethu Josephx page

`த்ரிஷ்யம் 3' ரிலீஸ் தேதி.. - ஜீத்து ஜோசப் சொன்ன அப்டேட் | Jeethu Joseph | Drishyam 3

த்ரிஷ்யம் பலரது வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவாக மாறி இருக்கிறது என்பதையே நான் புரிந்துகொள்கிறேன். அதற்கு என ஒரு சுமை உண்டு.
Published on

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா ஷரத் நடித்து 2013ல் வெளியான மலையாளப்படம் `த்ரிஷ்யம்'. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களா, சைனீஸ் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வரவேற்பையடுத்து, `த்ரிஷ்யம் 2' படத்தை இயக்கி 2021இல் வெளியிட்டார் ஜீத்து. நேரடியாக அமேசான் தளத்தில் வெளியான அந்தப் படமும் பெரிய வெற்றி. இரண்டாம் பாகமும் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது `த்ரிஷ்யம் 3' படத்தையும் எடுத்து முடித்துவிட்டார். சமீபத்தில் கேரளாவின் ஆழுவாவில் ராஜகிரி மருத்துவமனையின் புதிய பிரிவு ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டார் ஜீத்து ஜோசப்.

Jeethu Joseph give Drishyam 3 release update
Drishyam 3x page

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜீத்து ஜோசப், `த்ரிஷ்யம் 3' படத்தை பற்றி பேசியுள்ளார். "நான் ஜோன் ஃபாதரை முதன்முறை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய அறையில் இருக்கும் போது ஆண்டவர் உம்மோடு இருப்பாராக எனச் சொல்வார் என்று நினைத்தேன். ஆனால், அவர் `த்ரிஷ்யம் 3' எப்போது வெளியாகும் எனக் கேட்டார். அவர் மட்டுமல்ல, நிறைய பேர் அதைத்தான் கேட்கிறார்கள்.

Jeethu Joseph give Drishyam 3 release update
மீண்டும் படம் இயக்கப் போகிறேன்! - கே பாக்யராஜ் அறிவிப்பு | K Bhagyaraj

த்ரிஷ்யம் பலரது வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவாக மாறி இருக்கிறது என்பதையே நான் புரிந்து கொள்கிறேன். அதற்கு என ஒரு சுமை உண்டு. எனவே பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்தில் படம் வெளியாகும், ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

Jeethu Joseph give Drishyam 3 release update
ஜீத்து ஜோசப்x page

நீங்கள் இதுவரை அளித்த ஆதரவுக்கு நன்றி. ஜனவரி 30ஆம் தேதி என்னுடைய வேறொரு படமான `Valathu Vashathe Kallan' வெளியாகிறது. பிஜூ மேனனும் ஜோஜூ ஜார்ஜும் அதில் நடித்துள்ளனர். அது நல்ல சினிமாவாக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறேன். அதையும் நீங்கள் பார்க்க வேண்டும். நான் த்ரிஷ்யம் மட்டுமல்ல, மற்ற படங்களையும் இயக்குகிறேன்" என்றார்.

Jeethu Joseph give Drishyam 3 release update
ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘நேரு’ திரைப்படம் சொல்ல வரும் கருத்து என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com