”ராயனுக்காக களமிறங்கிய திரைப்பட்டாளம்”! தனுஷுடன் இணைந்த 9 முக்கிய நடிகர்கள்! மிரட்டும் போஸ்டர்கள்!

தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படத்தின் 9வது முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சரவணனை அறிவித்துள்ளது படக்குழு.
ராயன் படம்
ராயன் படம்PT

தமிழ் சினிமாவின் வெர்சடைல் ஹீரோவாக கலக்கிவரும் நடிகர் தனுஷ், 7 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறை இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கால்பதித்து வெற்றிக்கண்ட தனுஷ், கடந்த 2017ம் ஆண்டு பா பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் வெற்றிக்கண்டார். நடிகர் ராஜ்கிரன் லீட் ரோலில் நடித்து காதலை மையமாக கொண்டு வெளியான பா பாண்டி திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனாலும் அடுத்து எந்த படத்தையும் இயக்க ஆர்வம் காட்டாத தனுஷ் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்திவந்தார்.

ராயன்
ராயன்

இந்நிலையில், தற்போது தன்னுடைய 50வது திரைப்படத்தை அவரே இயக்கி நடிகராகவும் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்த கதாபாத்திரங்களையும் நடிகர்களையும் படக்குழு அறிமுகம் செய்துவருகிறது.

ராயன் படம்
“நீங்கள் தேடும் வீரர் நான்தான்”-விஹாரி பதிவுக்கு ரிப்ளை செய்த அரசியல்வாதி மகன்-தீவிரமாகும் விவகாரம்?

ராயன் திரைப்படத்தில் குதித்த திரைப்பட்டாளங்கள்!

ராயன் திரைப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக்கொண்டது என சொல்லப்படும் நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு நடிகர்களையும், அவர்களுடைய கதாபாத்திரத்தின் போஸ்டர்களோடு அறிவித்துவரும் படக்குழு ரசிகர்களின் கவனத்தை பெற்றுவருகிறது.

முதலில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உடல் பருமனோடு கறிக்கடையில் வேலைப்பார்ப்பது போல் காட்சியளிக்கும் தனுஷ் உடன், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் கையில் கத்தியுடன் இடம்பெற்றிருந்தனர்.

அதற்கு பிறகு ஒவ்வொரு போஸ்டர்களாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தனுஷ், நடிகர் எஸ்ஜே சூர்ய்வா போஸ்டரை வெளியிட்டு “உங்களை இயக்கியது மகிழ்ச்சியாக இருந்தது சார்” என்றும், நடிகர் மற்றும் இயக்குநர் செல்வராகவன் போஸ்டரை வெளியிட்டு “ஒருநாள் உங்களை வைத்து நான் டைரக்ட் செய்வேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை சார்” என்றும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து பிரகாஷ் ராஜ் போஸ்டரையும் வெளியிட படத்தின் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற ஆரம்பித்தது. அடுத்தடுத்து நடிகை அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் என படத்தில் இணைந்திருப்பதை பார்த்தால் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இயக்குநர் தனுஷ் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வளவு தான் நடிகர்கள் என நினைத்த போது தற்போது நடிகர் சரவணனின் போஸ்டரை வெளியிட்டு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது படக்குழு. இதுவரை வெளியான நடிகர் நடிகைகளின் பட்டியலின் படி, தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஐயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் சரவணன் உள்ளிட்ட திரைப்பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.

நடிகர் சரவணன் ராயன் படம் தொடர்பாக சமீபத்தில் பேசியிருந்தார். அதில், “தனுஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறேன். அது எனக்கு ஸ்பெஷலான படம். கொஞ்ச நேரமே வந்தாலும் சிறப்பாக இருக்கும். தனுஷ் இயக்குநராக அப்படி வேலை செய்கிறார். இவர் நடிகர் தானே எப்படி இயக்கப் போறார் என சாதாரணமாகத்தான் போனேன். போய் செட்டிற்குள் பார்த்தமும் மிரண்டுவிட்டேன். ரஜினி சாரின் ஜெயிலர் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் நல்லதாக இருக்கும்” என்று பூரிப்புடன் கூறியிருந்தார்.

ராயன் படம்
சர்ஃபராஸை மறைமுகமாக தாக்கி பேசிய சேவாக்! தோனியை வைத்து பதில் அட்டாக் செய்த ரசிகர்கள்! என்ன நடந்தது?

இதற்கிடையில் தன்னுடைய 3வது திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி முடித்துள்ளார். காதல் கதையை மையப்படுத்திருக்கும் அந்தப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com